23/09/2019 1:20 PM

காந்தி கொலையும் பின்னணியும்: ஓடிய இரத்த ஆறு! கையறுநிலையில் தலைவர்கள்!
காந்தி கொலையும் பின்னணியும்.. (பகுதி – 4)

சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிறந்து சுதந்திரத்திற்காக போராடவில்லையே எனும் ஆதங்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். எனக்கும் அப்படியே !

அதன் காரணமாகவோ என்னவோ சுதந்திரப் போராட்டக் கால நிகழ்வுகளை, சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம்.

பல வருடங்களுக்கு முன் பெரியவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது.அவர் அந்தக் காலத்து நாடக நடிகர்.பாரதத்திற்கு சுதந்திரம் கிடைத்தப் போது அவருக்கு வயது 35 என்றுதெரிவித்திருந்தார்.

அவர் ஒரு வியப்பூட்டும் விஷயம் ஒன்றை தெரிவித்தார். காந்தி தனக்கு இயற்கை யான மரணம் நேரக் கூடாது என விரும்பினார் என்பதுதான் அது.

‘’ ஏன் என்று நான் கேட்டேன் ‘’

பாரதம் துண்டாடப்பட்டு முஸ்லீம்களுக்கென பாகிஸ்தான் உருவானது, முஸ்லீம்களை அரவணைத்துச் சென்று சுதந்திரம் பெற வேண்டும் எனும் அவருடைய யுக்திக்கு (STRATEGY) கிடைத்த படுதோல்வி என்பதும், இதன் காரணமாக பெரும்பான்மை மக்களின் வெறுப்புணர்வுக்கு ஆளாகி விட்டோமே எனும் அவமானமும்தான் காரணம் என்றார்.

இது மட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அப்போது காந்தி சொல்வதை அப்படியே ஏற்காது எதிர்க் கருத்தும் கூறத் தொடங்கி விட்ட நிலை ஏற்பட்டது. இது பற்றி அவர் வெளிப்படையாகவே புலம்பத் தொடங்கியிருந்தார்.

பாரத சுதந்திரப் போராட்டக் களத்திலே இறங்கும் முன், கோபால கிருஷ்ண கோகுலே அவர்களின் அறிவுரையின்படி நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியவரின் மூளையிலே உதித்த எண்ணம் தான் ஹிந்துக்கள் கோழைகள், முஸ்லீம்கள் முரட்டுக் குணமுடையவர்கள்.

கோழைகளை வைத்துக் கொண்டு சுதந்திரம் பெற முடியாது; ஆகவே முஸ்லீம்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணி அவர்களை அளவுக்கு மீறி தாஜா செய்யவும் தொடங்கினார். ஆனால் சரித்திர நிகழ்வுகள் காட்டும் உண்மை வேறு விதமாக இருக்கிறது.

சுதந்திரம் கிடைத்தவுடன் காஷ்மீரை கைப்பற்ற பாகிஸ்தானின் முஸ்லீம் படைகள் முனைந்த போது, பாரதத்தின் ஹிந்துப் படைகள் அவர்களை ஓட ஓட விரட்டியது.

1965, 1971 போர்களிலும் பாகிஸ்தானின் முஸ்லீம் படைகள் தோல்வியை தழுவி புறுமுதுகிட்டு ஓடின.

கார்கில் போர், சர்ஜிகல் ஸ்டிரைக் ஆகிய நிகழ்வுகளும் கூட இதையே நிரூபிக் கின்றன.

முஸ்லீம்களின் ஓட்டு வங்கிக்காகவும், எச்சை பிரியாணிக்காகவும் ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் இல்லாது இருந்தால், முஸ்லீம்கள் அடக்க ஒடுக்கமாய் இந்த நாட்டிலே அமைதியாகவே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மறந்தும் தீவிரவாதச் சிந்தனை எழாது!

இப்போது பிரிவினைக் காலத்து நிகழ்வுகளுக்குள் போகலாம். நாட்டைத் துண்டாடி பாகிஸ்தானை உருவாக்குவது என்று முடிவானது.

அந்த முடிவிற்குப் பிறகும் கூட ஜின்னா மவுண்ட்பேட்டனிடம் கடு கடுவெனவே இருந்தார். மவுண்ட்பேட்டனால் ஜின்னாவிடம் எதுவுமே பேச முடியாத அளவிற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஜின்னா மிகக் கடுமையாகவே நடந்து கொள்வார். எந்த அரசு நெறிமுறைகளையும் பின்பற்ற மாட்டார். அவருக்கு எப்போது மவுண்ட்பேட்டனை சந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் எந்த முன் அனுமதியும் பெறாது உள்ளே நுழைந்து விடுவார்.

ஒரு சமயம் கடுமையான வார்த்தைகள் அடங்கிய ஒரு கடிதத்தை மவுண்ட் பேட்டனுக்கு அனுப்பினார். இதைப் பற்றி மவுண்ட்பேட்டனின் உதவியாளர் இஸ்மே கூறுகையில் ‘’ இப்படியொரு கடிதத்தை எம் அரசர் எழுதியிருந்தாலும் நான் சகித்திருக்க மாட்டேன். இப்படியொரு கடிதத்தை என்னிடம் கடைநிலை ஊழியராக வேலை பார்க்கும் ஒருவருக்குக் கூட அனுப்ப மாட்டேன் ‘’

மறுபுறம் காந்தி, நேரு, பட்டேல், முன் அனுமதி பெறாது மவுண்ட்பேட்டனை சந்திக்க போக மாட்டார்கள். ஒரு புறம் எரிச்சலூட்டிக் கொண்டேயிருந்த ஜின்னா,மறுபுறம் தான் என்ன சொன்னாலும் கேட்கத் தயாராயிருந்த காங்கிரஸ் தலைவர்கள்
இந்நிலையில்,காங்கிரஸ் தலைவர்களுக்கு திடீர் அதிர்ச்சியை கொடுத்தார் மவுண்ட்பேட்டன்.

1948 ஆம் வருடம் ஜூன் மாதம் வரை கால அவகாசம் இருந்த போதும்,அதாவது ஒரு வருட காலமிருந்த போதும்,75 நாட்களில்,பாரதத்திற்கு சுதந்திரமும்,பாகிஸ்தான் உருவாக்கத்திற்குமான நாளை குறித்து விட்டார்.

அது ஆகஸ்ட் 15 1947.

இந்த ஒரு அறிவிப்பை காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. திணறிப் போனார்கள்.

இது காறும் சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் எனும் நிலையிலிருந்து அந்த சுதந்திரம் முன்னிறுத்திய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியவர்கள் எனும் நிலைக்கு காங்கிரஸ் தலைவர்கள் தள்ளப்பட்டார்கள். அரசு நிர்வாகத்தை ஏற்று நடத்த வேண்டியவர்கள் ஆனார்கள்.

‘’ இப்படி அவசர அவசரமாக நீங்கள் வெளியேறினால், நாடெங்கும் பரவி வரும் வன்முறைகளை நாங்கள் எதிர்கொள்வது எப்படி?‘’ என்று கூட ஒரு காங்கிரஸ் தலைவர் கேட்டார்.

அப்போது, நாட்டை பிரித்துக் கொள்வது பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலே பெரிய அளவில் ஹிந்து முஸ்லீம் கலவரங்கள் வெடிக்கத் துவங்கி விட்டன.

இந்த அளவிலான கலவரங்களை ஆங்கில அரசே சந்தித்தது இல்லை. இது பற்றி மவுண்ட்பேட்டனிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்ட போது, அவர் கூறினார்; ‘’ நான் ஒரு ராணுவ வீரன் என்ற முறையில் கூறுகிறேன், இரத்த ஆறு நிச்சயம் ஓடாது ‘’

ஆனால் அவர் தந்த உறுதி மொழி அர்ததமற்ற ஒன்று என்பதற்கு சரித்திர நிகழ்வுகள் சான்றாக இருக்கின்றன. இரத்த ஆறு ஓடியது, வன்முறை வெறியாட்டங்கள் கட்டுக் கடங்காது நடந்தேறின. பிணமலைகள் குவிந்தன. காட்டிமிரண்டித்தனமான தாக்குதல்கள் நடந்தன. பிரிவினை காரணமாக மக்கள் திக்குமுக்காடிப் போயினர்.

ஒரு கோடியே இருபது லட்சம் பேர்… பாகிஸ்தானிலிருந்து ஹிந்துக்களும் சீக்கியர்களும், பாரதத்திலிருந்து பாகிஸ்தானிற்கு முஸ்லீம்களும்.. அகதி முகாம்களின் அங்கத்தினர்கள் ஆயினர்.

அவர்கள் கூறிய கதைகள் நெஞ்சை பிளப்பவை. அவை, தங்களுக்கே ஏற்பட்ட அனுபவங்கள், அல்லது தாங்கள் கண்களால் கண்டது அல்லது கேட்டது..

துன்ப ஓலங்கள், ஹிந்து,முஸ்லீம் இரு சாராரிடம் பரஸ்பரம் கடும் வெறுப்புணர்வை தூண்டியது. இதன் காரணமாக பாதிக்கப்படாத மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.. ஒவ்வொருவரும் திருப்பித் தாக்குவது பற்றியே பேசலாயினர்.

“ என் தந்தை ரெயில்வேயில் பணியாற்றி வந்தவர்.இரண்டாம் உலகப் போரின் போது,ராணுவத்தில் பணியாற்ற அனுப்பப்பட்டவர். நாடு பிரிவினையின் போது ஜலந்தரில் பணி புரிந்து வந்தார்.

அப்போது நிகழந்த வன்முறை வெறியாட்டங்களை நேரில் கண்ணுற்ற என் தாயார் என் சிறிய வயதில் (நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு முஸ்லிம் நண்பனை வீட்டிற்கு அழைத்திருந்தேன்.அவன் வந்து சென்ற பிறகு,இனிமேல் எந்த முஸ்லீமையும் வீட்டிற்கு அழைக்கக் கூடாது என என்னிடம் மிகக் கடுமையாகக் கூறினார்) அப்போது அவர் கூறிய தகவல் ஒன்றை இப்போது பகிர்கிறேன்.

பாரதத்திலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த முஸ்லீம் வெறியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறும் முன் பெரிய அளவில் ஹிந்து தாய்மார்களை கற்பழித்தனர்.

நோக்கம் : தாங்கள் வெளியேறினாலும், ஹிந்து தாய்மார்களின் வயிற்றிலே அவர்கள் வாரிசு வளர வேண்டும் என்பதாம்.

எங்கள் வீட்டில் எந்த முஸ்லீமையும் நாங்கள் அனுமதிப்பதில்லை “.

வன்முறைக் கலவரங்களிலே உயிரிழந்தோர் எண்ணிக்கை இருபது லட்சத்திற்கும் மேலே என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இது போன்றாதோரு ரணகளமான சூழலிலே 40 லட்சம் முஸ்லீம்கள் பாரதத்திலேயே தங்கி விடுவது என முடிவு செய்தனர்.

( தொடரும் )

– எழுத்து : யா.சு.கண்ணன்Recent Articles

வெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.!

#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#

டிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..?

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்! செங்கோட்டையன்!

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு ! வாபஸ் பெற தமிழிசை முடிவு?

தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்ற நிலையில் வழக்கை தொடர விரும்பவில்லை என்று தமிழசை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தைக்கு விபத்து! அறிவித்த வாட்ச்! உயிர் மீட்ட போலீஸ்!

அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சேதமடைந்த நிலையில் விபத்து நடந்து இருப்பதை உறுதிசெய்து நடந்த இடத்தையும், நபர் சுயநினைவை இழந்து கிடப்பதாகவும் குறுஞ்செய்தியை அவரது மகன் மற்றும் அவசர சேவை மருத்துவமனைக்கு மற்றும் அவசர அழைப்புக்காக கொடுக்கப்பட்ட எண் இரண்டிற்கும் குறுஞ்செய்திஅனுப்பியுள்ளது.

Related Stories