vankodumai 1
vankodumai 1

பள்ளி சென்ற மாணவியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் குருசேஷ்ரா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் வழக்கம் போல் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி பள்ளிக்குச் சென்றார். அதன்பின் மதியம் 1.30 மணிக்கு ஆங்கிலம் பயில்வதற்காக பயிற்சிக்கு சென்று வீடு திரும்புவார்.

ஆனால் அன்று வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து மாணவி ஆங்கில வகுப்பு கல்வி பயிலும் இடத்தில் சென்று பார்த்தனர். அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவி இன்று பயிற்சிக்கு வரவில்லை என்று கூறினர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் செய்த விசாரணையில், சிறுமி தனது நெருங்கிய தோழியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்த நபர் ஒருவர் மாணவியை அவர் வீட்டில் இறக்கி விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் அவர் மாணவியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் தன் நண்பரின் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரது நான்கு நண்பர்களும் சேர்ந்து அந்த மாணவியை பாலியல் கொடுமை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரில் 3 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். அதில் இருவருக்கு 18 வயது என்றும், ஒருவர் சிறுவர் என்றும் போலீசார் கூறியுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending