ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நடக்க இருந்த முக்கால் மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன்… இந்த விஷயத்தை என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.
இது குறித்து அவர் போட்டுள்ள டிவிட்…
கிட்டத்தட்ட ஐபில் ஏலம் நடக்க 3/4 மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். இந்த விசயத்த இப்போ அது நிதர்சனம். நம்பிக்க வெச்சா எதுவும் சாத்தியம்.வேர்வை சிந்தி உழைச்சா எந்த இலக்கையும் அடைய முடியும் என்னோட 4th @ipl கப் @ChennaiIPL காக #WhistlePoduகோப்பை வெல்ல ஓங்கிய கைகள் #எதிர்காலம்
கிட்டத்தட்ட ஐபில் ஏலம் நடக்க 3/4 மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். இந்த விசயத்த இப்போ அது நிதர்சனம். நம்பிக்க வெச்சா எதுவும் சாத்தியம்.வேர்வை சிந்தி உழைச்சா எந்த இலக்கையும் அடைய முடியும் என்னோட 4th @ipl கப் @ChennaiIPL காக #WhistlePodu கோப்பை வெல்ல ஓங்கிய கைகள் #எதிர்காலம் pic.twitter.com/fC7IDmGR2E
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 28, 2018
இதற்கு முன்னர், ‘குருதியில் மஞ்சளை ஏந்தி கோப்பையை வென்றோம்; மக்களை வென்றதே நமது வெற்றி’ என ஐ.பி.எல்., கோப்பையை வென்ற பின் சென்னை அணி வீரர் ஹர்பஜன் தமிழில் டுவிட் செய்திருந்தார்.
சென்னை அணியில் ஹர்பஜன் சிங் தேர்வானதிலிருந்து, ஒவ்வொரு முறையும் தமிழில் டுவிட் செய்து வந்தார். ஒவ்வொரு மேட்சின் முடிவிலும் ஹர்பஜன் தமிழில் டிவிட் செய்து வந்தார். ஹர்பஜன் தமிழில் பதிவிட்ட டுவிட்டை, ரசிகர்களும் தொடர்ந்த டிரண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், கோப்பையை வென்ற பின், ‘மக்களை வென்றதே நமது வெற்றி’ என டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
தோட்டாவென கிளம்பிய பந்துகள்.கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி @IPL கோப்பையை வென்றோம்.எமை அடித்து,அழுத்தி ஆட(ள)முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி் கடந்து போராடி கிடைத்த வெற்றி @chennaiipl மக்களுக்கு சமர்ப்பணம்.மக்களை வென்றதே நமது வெற்றி.சுட்டாலும் சங்கு வெண்மையே#நன்றி pic.twitter.com/OnATPBSn3G
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 27, 2018