ஐபிஎல் ஏலம் நடக்க முக்கா மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாராம் ஹர்பஜன்… இந்த விசயத்த..!

Published:

harbajan singh - 2026

ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நடக்க இருந்த முக்கால் மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன்… இந்த விஷயத்தை என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

இது குறித்து அவர் போட்டுள்ள டிவிட்…

கிட்டத்தட்ட ஐபில் ஏலம் நடக்க 3/4 மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். இந்த விசயத்த இப்போ அது நிதர்சனம். நம்பிக்க வெச்சா எதுவும் சாத்தியம்.வேர்வை சிந்தி உழைச்சா எந்த இலக்கையும் அடைய முடியும் என்னோட 4th கப் காக கோப்பை வெல்ல ஓங்கிய கைகள்

 

இதற்கு முன்னர், ‘குருதியில் மஞ்சளை ஏந்தி கோப்பையை வென்றோம்; மக்களை வென்றதே நமது வெற்றி’ என ஐ.பி.எல்., கோப்பையை வென்ற பின் சென்னை அணி வீரர் ஹர்பஜன் தமிழில் டுவிட் செய்திருந்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சென்னை அணியில் ஹர்பஜன் சிங் தேர்வானதிலிருந்து, ஒவ்வொரு முறையும் தமிழில் டுவிட் செய்து வந்தார். ஒவ்வொரு மேட்சின் முடிவிலும் ஹர்பஜன் தமிழில் டிவிட் செய்து வந்தார். ஹர்பஜன் தமிழில் பதிவிட்ட டுவிட்டை, ரசிகர்களும் தொடர்ந்த டிரண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், கோப்பையை வென்ற பின், ‘மக்களை வென்றதே நமது வெற்றி’ என டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img