கர்நாடாக மாநிலம், கொலர் மாவட்டம் வதகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலா. இவர் அம்மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ கடைசி ஆண்டு படித்துவந்தார்.
இவருக்கு டிக்-டாக் வீடியோ எடுப்பதில் ஆர்வம் அதிகம். இன்று அப்பகுதியில் அருகே இருக்கும் ஏரிக்கு டிக்-டாக் வீடியோ எடுப்பதற்காக மாலா சென்றுள்ளார். அப்போது ஏரியின் அருகே மும்முரமாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அவர், எதிர்பாரதவிதமாக கால் தவறி ஏரியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாமாக உயிரிழந்தார்.