ஒரே நாளில் இரண்டரை லட்சம் பேர்… அத்திவரதர் தரிசனம்! இன்றும் கூட்டம்தான்!

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

athivarathar crowd1 - 2026

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு அத்திவரதரை ஒரே நாளில் இரண்டரை லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

அத்தி வரதர் வைபவம் தொடங்கிய நாளில் இருந்து இந்த 13 நாட்களில் இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தரிசனம் செய்துள்ளனர். வார நாட்களில் சராசரியாக இதுவரை ஒரு லட்சம் பேரும், வார இறுதி நாட்களில் சராசரியாக 2 லட்சம் பேரும் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.

நேற்று கட்டுக்கடங்காத கூட்டம் காஞ்சியை மொய்த்தது. எந்தப் பக்கத்தில் இருந்து வரும் மக்கள் கூட்டத்தை எப்படி அனுப்புவது என்று தெரியாமல், விழி பிதுங்கி நின்றனர் அதிகாரிகள். ஒவ்வொரு சாலையில் இருந்தும் கோயிலை நோக்கி பெருமளவில் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வந்ததால், பெரும் நெரிசல் ஏற்பட்டது. நேற்று சனிக்கிழமை என்பதால் அதிக கூட்டம் இருந்ததாகவும், இன்றும் அதே அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்றும் கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள்.

இதனிடையே கூட்டம் அதிகமாக இருப்பதால் நள்ளிரவு ஒரு மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி அளித்துனர் அறநிலையத்துறை அதிகாரிகள்.

இதனிடையே, உள்ளூர் மக்கள் சொல்வது… முதியோர்கள் ( senior citizen ) மற்றும் கைக்குழந்தைகளுடன் வருவோர் நேராக டோல்கேட் ( கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து 1/2கிமீ ) வந்துவிடவும். அங்கிருந்து மட்டுமே அனுமதி. முதியோரை அழைத்து செல்ல ஒருவருக்கு அனுமதி உண்டு.

டோல்கேட் செல்ல வாலாஜாபாத் அய்யன்பேட்டை வழியாக காஞ்சிக்கு வரவும். அய்யன்பேட்டையில் இருந்து ஷேர் ஆட்டொ மற்றுன் மினி பேருந்துகள் டொல்கேட் வரை வருகின்றன.

வரிசையில் நிற்பதற்கு முன் இயற்கை உபாதைகளை முடித்து விட்டு வரிசையில் நிற்கவும். வரிசையில் நின்றுவிட்டால் பிறகு கடினம்… என்கின்றனர்.

நேற்று நள்ளிரவு அத்திவரதரை தரிசிக்க வந்த மக்கள் கூட்டம் குறித்த காணொளி பதிவு..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.