தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அமைந்தள்ள இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம். சில்வர்புரம். இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த கிராமத்தில் வசித்து வந்த 31 வயதான ராமலட்சுமி என்ற பெண்ணின் கணவர் தொழிற்சாலைகளில் இருந்து பரவும் கேன்சர் பாதிப்பால் முன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதே போன்று அங்கு வசிக்கும் அனைத்து குடும்பத்திலும் கேன்சர் பாதிப்பால் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கேன்சர் நோய்க்கு காரணம், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளே காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.



