vasudevananda saraswathi sankaracharya - 2026

பிரதமர் நரேந்திர மோடி சனாதன தர்மத்தைக் கட்டிக் காத்து வருகிறார் என, மதுரை வந்த ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகி பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசுதேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேண்டுகோளின்படி, தென் மாநில கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதன்படி,
ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியான பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசு தேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் இன்று
மதுரை வருகை புரிந்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சுவாமிகள், சின்ன சொக்கிகுளம் பெசன்ட் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்திற்கு வருகை புரிந்த சுவாமிகளுக்கு மதுரை சங்கர மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் வெங்கட் ரமணி, மற்றும் ராமேஸ்வரம் சங்கர மடத்தின் நிர்வாகி ஆடிட்டர் சுந்தர் மதுரை அனுஷத்தின் அணுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மதுரை சங்கர மடம் வாத்தியார் ராதாகிருஷ்ணன் சாஸ்திரிகள் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்!

பின்னர், பூஜ்யஸ்ரீ ஜகத்குரு வாசுதேவானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது,

பாரத நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற நடந்தது தான் ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளார்.

500 வருடமாக இருந்த ராமர் கோயில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது‌. பாரத நாட்டில் ராம ராஜ்யம் ஏற்பட இது வழிகாட்டியுள்ளது‌.

வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் எந்த வித வேறுபாடும் கிடையாது‌. தென் இந்தியாவில் இருந்து நிறைய மக்கள் அயோத்திக்கு வருகின்றார்கள். அயோத்தி ராமர் கோயில் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டியுள்ளது‌. பிரதமர் நரேந்திர மோடி சனாதன தர்மத்தை கட்டி காத்து வருகிறார்.” என்றார்.

தென் மாநிலங்களுக்கு புனித யாத்திரைக்காக அயோத்தியில் இருந்து புறப்பட்ட சுவாமிகள் ராமேஸ்வரம் சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர்
இளையாத்தான்குடி கைலாச நாதர் கோவில், கனக துர்க்கை கோவில், தஞ்சாவூர் பெரிய கோவில், பங்காரு காமாட்சி அம்மன் கோவில், திருவிடைமருதூர் , சிதம்பரம் உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்தனர்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

சுவாமிகளுடன் சன்னியாசி சிஷ்யர்கள் சங்கரானந்த கிரி பிரமானந்த சரஸ்வதி தக்ஷிண பாரத யாத்திரை குழு பொறுப்பாளர் வழக்கறிஞர் வேணுகோபால் ஆகியோர் வந்தனர். சுவாமிகள் மதுரையிலிருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending