தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டதும், அதற்கான காரணமாக அமைந்த சம்பவமும் பலரும் அறிந்ததுதான். இருந்தாலும், சுருக்கமாக இந்தப் பின்னணி…
தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியில் இந்துக்களுக்கும் அங்குள்ள முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் சின்னச் சின்னதாகக் கடந்த 20 வருடங்களாகவே இருந்து வருகின்றது. காரணம் முழுக்க முழுக்க மதமும் ஜாதியும் தான். தலித் மக்களை இஸ்லாமியர்களாக மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி, பல வருடங்களாகவே இஸ்லாமிய அடிப்படைவாத இயங்கங்கள் கொடுத்த நெருக்குதல், இந்த மோதலுக்கு வழிவகுத்துள்ளது. இதனால் அந்த மோதல் போக்கும் தொடர்ந்து வருகிறது.
கடந்த வாரம் தலித் குடும்பத்தில் ஒரு பெண்மணி இறந்து விட்டார், அவருக்கான இறுதிச் சடங்கு செய்ய, சுடுகாட்டுக்கு வழக்கமாக எடுத்துச் செல்லும் பாதையில் பந்தல் போடப் பட்டிருந்த காரணத்தால், பாடையைத் தூக்கிச் செல்ல முடியாது என்ற நிலையில், முஸ்லிம் தெரு வழியாக எடுத்துச் சென்றது தான் தற்போதைய கலவரத்துக்குக் காரணம். இங்கே நாம், ஹிந்து என்று குறிப்பிடாமல் தலித் குடும்பம் என்று குறிப்பிட்டதன் காரணம், பறப்பயலுக பிணத்தை எங்க தெருவிற்குள் எடுத்து வரக்கூடாது என்று அதீதமாக இஸ்லாமியர்கள் வசைபாடியதால் தான், சண்டை மூண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டவே!
அந்தப் பெண்மணியின் இறுதிச் சடங்கு முடிந்த இரண்டாம் நாள், ஆண்கள் எல்லாரும் வேலைக்குச் சென்ற பின், வெளியூர்களில் இருந்து முஸ்லீம் இளைஞர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்களை வர வைத்து, உள்ளூர் முஸ்லீம்கள், தலித்களின் வீடுகளை அடித்து நொறுக்கியும், கற்களை எறிந்து பெண்களைத் தாக்கியும் இருக்கிறார்கள்.
இது குறித்து கேள்விப்பட்டதும் ஊருக்கு ஓடி வந்த உள்ளூர் ஆண்களும் தாக்கப்பட்டிருக்கின்றனர். அதன் பின் காவல்துறை உள்ளே நுழைந்து, ஊரடங்கு உத்தரவு போட்டு, மேலும் கலவரம் ஏற்படாமல் தடுத்து வைத்திருக்கிறது.
சரி… 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் பொம்மநாயக்கன்பட்டியின் நிலவரம் இப்போது எப்படி இருக்கிறது?
* இந்து ஆண்கள் யாரையும் ஊருக்குள் வரவிடாமல் மிரட்டி வைத்திருக்கிறார்கள். வந்தால் கைது செய்வோம் என்று போலீஸ் மிரட்டிக் கொண்டிருக்கிறது.
* முஸ்லிம் ஆண்கள் எல்லாரும் உள்ளூர் மசூதிக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை போலீஸ் பிடிக்க மறுக்கிறது. மசூதிக்குள் நுழைய முடியாது என்று போலிஸ் தரப்பு சொன்னாலும், உண்மையான காரணமாக உள்ளூர் பெண்கள் சொல்வது, முஸ்லிம்கள் சார்பாக போலீஸாருக்கு 7-8 லட்சங்கள் லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள், அதனால் எங்களை போலீஸ் ஒன்றும் செய்யாது என்று உள்ளூர் முஸ்லிம்கள் வெளிப்படையாகவே கொக்கரிக்கின்றனர் என்று, பாதிக்கப்பட்ட தலித் பெண்கள் ஆதங்கத்துடன் சொல்கிறார்கள்.
* ஆண்கள் இல்லாததால் மனதளவில் பாதிக்கப்பட்டதுடன், கூலித் தொழிலாளிகளான அந்த மக்கள் இப்போது சாப்பாட்டுக்கும் பிரச்னையுடன் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
* ஊருக்கு வெளியே இருக்கும் மசூதியிலும் திண்டுக்கல் உட்பட வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் கண்டும் காணாமல் இருப்பதாக உள்ளூர் மக்கள் அச்சத்துடன் சொல்கின்றனர்.
* முஸ்லிம் தரப்பில் கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 12 பேர்தான். அதில் ஆறு பேர் வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்டவர்கள். குறிப்பாக மூன்று பேர் பெங்களூரிலிருந்து! எனவே, இது முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்ட கலவரம் என்றும், இது ஒன்றும் யதேச்சையாக நடக்கவில்லை என்றும் ஆதாரத்துடன் சொல்கிறார்கள் உள்ளூர் தலித் மக்கள்.
* எஸ்சி.,எஸ்டி., ஆணையத் தலைவர் திரு.L. முருகன் வந்து நிலவரம் விசாரித்து விட்டு என்னென்ன நிவாரணம் செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.,க்கு உத்தரவிட்டுப் போன பின்பும், கண் துடைப்புக்காக மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது.
எடுத்துக்காட்டுக்களுக்காகச் சில….
கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்டு, உடைக்கப்பட்டு சுத்தமாக அழிக்கப்பட்ட குரு ஸ்டுடியோவில் இருந்த பொருட்கள்,
ஒன்று முதல் ஒன்னரை லட்சம் மதிப்புள்ள மூன்று கேமராக்கள் மற்றும் பிரிண்டர்களுடன், கோவில் பணம் ரூபாய் 45ஆயிரம். பாதிக்கப் பட்டவர் தரப்பிலிருந்து கேட்கப்பட்ட இழப்பீடு ரூ.14 லட்சம். அதற்கு மாவட்ட நிர்வாகம் கொடுத்துள்ள இழப்பீடு ஒரு லட்சம் மட்டுமே.
ராஜேஸ்வரி எலெக்ட்ரிகல்ஸ் என்ற கடைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு கோரப்பட்ட இழப்பீடு ரூ 45ஆயிரம். மாவட்ட நிர்வாகம் வழங்கிய இழப்பீடு வெறும் ஐயாயிரம்.
கலவரத்தில் சேதம் அடைந்த தலித் வீடுகளுக்கு ரூபாய் 1000 முதல் மூவாயிரம் வரை மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது.
மேலேயுள்ள நிவாரணங்கள் எல்லாம் எஸ்.சி கமிஷன் துணைத் தலைவர் முருகன் வந்து உத்தரவு போட்டதால் செய்யப்பட்ட கண் துடைப்பு வேலை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அரசாங்க நிர்வாகம் என்றால், இப்படித்தான் மிகக் குறைந்த அளவுக்கே இழப்பீடு கொடுப்பார்கள் என்று சமாதானம் சொல்ல விழைபவர்கள் கவனத்துக்கு…
அந்தக் கலவரத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம் ஒருவரின் ஒன்னரை லட்சம் மதிப்புள்ள பழைய டாட்டா சுமோவுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கிய இழப்பீடு, ரூ. 3 லட்சம்.
எப்படியான நடுநிலைத் தீர்ப்புகளும், எப்படியான பாதுகாப்புகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன என்பதற்கான உதாரணங்கள் தான் இங்கே தெரிவிக்கப் பட்ட கள நிலவரத் தகவல்கள்.
இப்போதைக்கு… பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கான அவசரத் தேவை...
1, அவர்களுடைய ஊரின் சமுதாயத் தலைவரை உடனடியாக விடுதலை செய்து ஊருக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். அவர் வராமல், யாருடனும் பேச்சுவார்த்தைக்குக்கூட போக அச்சப் படுகிறார்கள்.
2, கடந்த பத்து நாட்களில் கூலி வேலைக்கும் போக முடியாமல் போனதால் அன்றாட உணவிற்கே தட்டுப்பாட்டுடன் இருக்கின்றனர். மூன்று வேளை உணவுக்கு வழி செய்ய வேண்டும்.
3, எஸ்.சி ஆணையத் துணைத் தலைவர் முருகன், மீண்டும் ஒரு முறை களத்திற்கு வந்து நடந்தவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
– இவை அந்த கிராமத்தினர் கேட்கும் உடனடி அவசரக் கோரிக்கைகள்.
அந்த ஊர் மக்களிடம் பேசும் போது,நிரந்தரத் தீர்வாக அந்தக் கிராம மக்கள் அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லுமாறு அரசின் முன் வைக்கும் கோரிக்கைகள்…
1, ஊரின் மையத்தில் இருந்த மந்தையம்மன் கோவிலை ஆக்கிரமித்து, முஸ்லிம் ஒருவர் டீக்கடை நடத்தி வருகிறார். இதை மீட்டுத் தரச் சொல்லி முறையிட்டதன் பேரில் பத்து வருடங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால், அந்தக் கோவில் ஆக்கிரமிப்பு குறித்து இது வரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு கோவிலை மீட்டுத் தரவேண்டும்.
2, பொம்மிநாயக்கன்பட்டியிலுள்ள மசூதியில் அடிக்கடி வெளியூரிலிருந்து ஆட்கள் வந்து ஏதோ பயிற்சிகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதனை காவல்துறையினர் கூர்ந்து விசாரித்து நிரந்தரத் தீர்வுக்கு வழி காண வேண்டும்.
3, மதம் மாறச் சொல்லி மிகக் கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகின்றனராம். ஒன்று மதம் மாறு. அல்லது ஊரைக் காலி பண்ணிட்டு ஓடு என்று வெளிப்படையாகவே மிரட்டுகின்றனராம். அதற்கும் ஒரு நிரந்தரத் தீர்வு தேவை.
4, அரசு இடத்தை (பழைய பள்ளிக் கூடம் என்கிறார்கள்) ஆக்கிரமித்து, முஸ்லிம் சமுதாயத்தினர் திருமண மண்டபம் ஒன்றைக் கட்டி அதை தொழில்முறையில் பயன்படுத்தி வருகின்றனர். அதை மீட்டு மீண்டும் பள்ளிக் கூடமாக மாற்றித் தர வேண்டும் என்கிறார்கள்.
பொம்மிநாயக்கன்பட்டி என்ற ஊரை, துலுக்கப்பட்டை என்று பெயர் மாற்ற நடவடிக்கைகளை எடுத்து வரும் முஸ்லிம்கள், தங்களின் பரிமாற்றங்களில் அப்படியே குறிப்பிடுகின்றனர். இது மிகப்பெரும் பதட்டத்தை ஊரில் ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, இந்தக் கலவரத்துக்குப் பின்னர், காவல் துறையை அணுகி மனு கொடுத்த போதும், அதன் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகளிலும், அவர்கள் இந்த ஊரின் பெயரை துலுக்கர்பட்டி என்றே குறிப்பிட்டுள்ளனர்.
துலுக்கர்பட்டி கலவரம் சம்பந்தமாக தேனி எஸ்பி., பாஸ்கரனை டின்.என்.டி.ஜே மாநில செயலாளர் நெல்லை யூசுப் -செய்யது அலி ஆகியோர் நேரில் சந்தித்து மக்கள் அமைதி வேண்டி கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுக்கப்பட்டதாக ஊடகத்தினருக்கு செய்தி அளிக்கப் பட்டது.
முஸ்லிம்களை தாக்கி கலவரம் செய்த காவி பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஎன்டிஜே சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையில், இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள். இது குறித்த அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பப் பட்டிருந்தது.
“தேனி மாவட்டம் துலுக்கப்பட்டியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஈத்கா திடல் இடத்தை அபகரிக்கும் நோக்கில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. முஸ்லிம்கள் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியும் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். முஸ்லிம்களின் விவசாய நிலத்தில் விளைந்த வாழைமரங்கள் வெட்டி வீசப்பட்டுள்ளன.
இந்த வன்முறை சம்பவத்திற்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட காவி பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது… என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக பொதுச் செயலாளர் எம்.எஸ்.சையது இப்ராஹீம் – என்று அறிக்கை அனுப்பப் பட்டது.
கலவரம் செய்துவிட்டு, அடிபட்டவர்கள் திருப்பித் தாக்கும் முன்னர் மசூதிகளில் ஒளிந்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள் முஸ்லிம்கள் என்று கூறும் இவ்வூர் மக்கள், இப்படி அரசாங்க கெஜட்டில், அலுவலக நடைமுறைகளில் உள்ள பொம்மிநாயக்கன்பட்டி என்ற எங்கள் ஊர் பெயரையே துலுக்கர்பட்டி என்று மாற்றும் அளவுக்கு செயல்படும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், போலீஸார் அவர்களுக்கு சாதகமாகவே செயல்படுவது சந்தேகப்பட வைக்கிறது என்றும் கூறுகின்றனர்.
முக்கியமாக, தலித் மக்களின் நல்வாழ்விற்காகப் போராடுவதாகக் காட்டிக் கொண்டிருக்கும் கட்சிகள், அமைப்புகள் எதுவும் இந்தக் கிராமத்தின் பக்கம் வரவே இல்லை என்றும், தலித்துகளுக்கு எதிரானவர்களாக ஊடகங்களாலும், மற்ற அமைப்புகளாலும் சித்திரிக்கப்பட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களே தங்களை வந்து பார்த்து ஆறுதல் அளித்து உதவிகள் புரிவதாகவும் கூறுகின்றனர் பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்.
தமிழகத௠தலித௠தலைவரà¯à®•ள௠எஙà¯à®•ே !? சாத௠மிரணà¯à®Ÿà®¾à®²à¯ காட௠கொளà¯à®³à®¾à®¤à¯ எனà¯à®± மொழியை உணà¯à®®à¯ˆà®¯à®¾à®•à¯à®• கஙà¯à®•ணம௠கடà¯à®Ÿà®¿à®¯à¯à®³à¯à®³à®©à®°à®¾ ? திரà¯à®®à®¾, வைகோ போனà¯à®± “சமà¯à®¤à®¾à®¯ நலம௠விரà¯à®®à¯à®ªà®¿à®•ள௔ போடà¯à®®à¯ வேஷதà¯à®¤à¯ˆ இனியேனà¯à®®à¯ தமிழகம௠நமà¯à®ª வேணà¯à®Ÿà¯à®®à®¾