கொட்டும் மழையிலும் கெட்டிமேளம்! கேரள வெள்ளநிவாரண முகாமில் கலகல கல்யாணம். நடந்தது.
கேரளாவில் கடும் மழைவெள்ளத்தால் சிக்கி சிதறுண்டு ஆகிவரும் வேளையில் அரசும், தன்னார்வ அமைப்புகளும் நிவாரண முகாம்களை அமைத்து பொதுமக்களை பாதுகாத்து வருகின்றனா்.
இத்தனை களோபரங்கரங்களுக்கு நடுவே புதிய வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய கேரளாவைச் சேர்ந்த அஞ்ச ஷைஜீ தம்பதியினா்.
மலப்புறம் மாவட்டம் கடலண்டி ஆற்றின் கரையில் தாய் ஷோபாவுடன் வசித்து வந்தவா் அஞ்சு.
இவரது வீடு தற்போது கேரளாவை புரட்டி போட்டு வரும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து அஞ்சு மற்றும் அவரது தாயார் ஷோபாவும் தற்போது மலப்புறம் எம்.எஸ்.பி லோயர் பிரைமரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் ஏற்கனவே அஞ்சுவுக்கும், ஷைஜீக்கும் முகாம் அமைக்கப்பட்டிருக்கும் திரிபுராந்தகா் கோவிலில் வைத்து திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து தீடிரென ஏற்பட்ட வெள்ளசேதத்தில் சிக்கியிருப்பதால் திருமணம் குறித்து மேற்கொண்டு எந்த முடிவு எடுக்கப்படாமல் தவித்து வந்துள்ளனா்.
ஆனால் இது குறித்து செய்தி அறிந்த முகாம் வாசிகள் அனைவரும் ஒரே குடும்பமாகிவிட்டார்கள் அவா்களின் ஆதரவுடன் நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணம் நடத்தியே தீர்வது என முடிவு எடுத்தனா்.
இதன்படி இருவரின் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. மணமக்களுக்கு புத்தாடைகள் அலங்காரம் செய்யப்பட்டு குறித்த நேரத்தில் மணமகன் ஷைஜீ வந்து சேரவே உற்றார், உறவினா்கள் முகாம் வாசிகள் தலைமையில் அஞ்சு,ஷைஜீ திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
திரபுராந்தகா் ஆலயத்தின் சார்பில் திருமண விருந்த நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடந்தது.
இச்சம்பவம் காண்போர் அனைவரையும் ஆனந்த கண்ணீா் விட வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுதியது.