
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கல்லூரணியை சேர்ந்த சசிவர்ணம் என்பவரின் வீட்டு பத்திரம் தொலைந்து போனதால், நகல் பத்திரம் பெறுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி மற்றும் பாலய்யா ஆகிய வக்கீல்களின் உதவியை நாடினார்.
இவர்களில் பாலய்யா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஆக உள்ளார். இந்நிலையில், அவர் வீட்டுப் பத்திரத்தின் நகல் பத்திரம் பெறுவதற்காக ஆட்சேபனை சான்றிதழை பெற்று தந்துள்ளனர்.
அதை வாங்கிக்கொண்டு இளையான்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சசிவர்ணம் கொடுத்துள்ளார்.
சசிவர்ணம் கொடுத்த சான்றிதழில் இன்ஸ்பெக்டர் சீல் பதிவாகி, எஸ்.ஐ., சிவம் என்பவரது கையெழுத்து இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், எஸ்.ஐ.,யிடம் காண்பித்து வருமாறு கூறியுள்ளனர்.
இதனைப் பார்த்த எஸ்.ஐ., அது தன்னுடைய கையெழுத்து இல்லை எனக் கூறி, சான்றிதழ் அளித்தவர்கள் குறித்து விசாரித்தார்.
இதை அடுத்து, சிக்கிக் கொண்ட பாண்டி, பாலய்யா இருவரும் கைது செய்யப்பட்டனர்.