jothimani - 2026
எனது செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டார் என்று கரூர் கலெக்டர் மீது ஜோதிமணி எம்.பி. பரபரப்பு புகார் கூறினார்.

கரூரில் எம்.பி.ஜோதிமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் பாராளுமன்ற தொகுதி முழுவதுமே குடிநீர் பிரச்சினையால் தவித்து வருகிறது.

நீண்ட நாட்களாக குடிநீர் சம்பந்தமான ஆக்கபூர்வமான பணிகளை சரிவர மேற்கொள்ளாததே இதற்கான காரணம் ஆகும்.

கரூரில் குடிநீர்திட்ட பணிகள் ஆய்வு கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. இது பாராளுமன்ற உறுப்பினரின் அதிகாரத்தை தட்டி கழிக்கும் போக்காக தான் தெரிகிறது.

மேலும் தொகுதிகளிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.

water bump 1 - 2026

தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினையையொட்டி எனது செல்போன் நம்பரை, கலெக்டர் “கால் பிளாக்” செய்துள்ளார்.

நான் பாராளுமன்ற உறுப்பினரானதும் அதனை எடுத்து விட்டிருப்பார் என நினைத்தேன். ஆனால் தொடர்ந்து கால் பிளாக்கில் வைத்துள்ளார்.

இப்படி இருந்தால் பொதுமக்கள் கூறும் கோரிக்கைகளை எப்படி முன் வைப்பது? எனவே இனியாவது இதனை மாற்றி கொள்ள வேண்டும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

தமிழகத்திலுள்ள தீவிரமான குடிநீர் பிரச்சினையை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி அதற்கான தனி நிதியை மத்திய அரசானது மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்,

காவிரி பிரச்சினையிலும் உரிய தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். தண்ணீர் பிரச்சினை என்பது பொதுப்பிரச்சினை.

இது அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரசை சேர்ந்த அரசியல் பிரச்சினை அல்ல. எந்த கட்சியாக இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், மாவட்ட நிர்வாகம் ஒன்றிணைந்து பணியாற்ற கடமை பட்டவர்கள் தான் என்பதை உணர்ந்து ஆய்வு கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கலெக்டரிடம் கேட்டபோது, ‘எம்.பி. ஜோதிமணியின் செல்போன் எண்ணை பிளாக் செய்யவில்லை’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending