Dengu 2 - 2026

வாரத்தின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படும் என்று தமிழக சுகதாரத்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தீவிரத்தை கட்டு படுத்த நாளை முதல் டெங்கு ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது என்று கூறியுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.

சென்னை முதல் குமரி வரை அனைத்து மாவட்டங்க ளிலும் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தினசரி டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் மரணம் அடைந்து வருவதும் நிகழ்ந்து வருகிறது.

DENGU DAY - 2026

இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், டெங்குவை கட்டுப்படுத்த தமிழகஅரசு முழு மூச்சில் கவனம் செலுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை 3400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

இதையடுத்து, தமிழகத்தில் நாளை முதல் ஒவ்வொரு வியாழக் கிழமை அன்றும் டெங்கு ஒழிப்பு நாள் அனுசரிக்கப் படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களில் கார்ப்பரேஷன் பணியாட்கள் மூலம் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கவும் வசிப்பிடங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை கண்காணிப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதையடுத்து வெள்ளிக்கிழமைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து, கொசு உற்பத்திக்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டும், இதுபோல ஒவ்வொரு வியாழக் கிழமைகளில் கொசு ஒழிப்பு நாள் அறிவிக்கப்பட்டது.

தற்போது அதே அறிவிப்பு மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending