
மதுரை அருகே பணம் கேட்டு கொடுக்காத அம்மாவை உலக்கையால் அடித்தக் கொன்ற மகன் பரபரப்பு சம்பவம்.
மதுரை மாவட்டம், சேடப்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் கொல்லமுத்து.
இவரது மனைவி ஜோதியம்மாள் (வயது 60). இவர்களது மகன் முத்துப்பாண்டி (32), இவர் தச்சு வேலை பார்த்து வந்தார். இவர் சரவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இவர் பலரிடமும் கடன் வாங்கி உள்ளார்.
பணம் வாங்கியவர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில் அவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தாயார் ஜோதியம்மாளை சந்தித்து முத்துப்பாண்டி பணம் கேட்டார்.
ஆனால் அவர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது . இதனையடுத்து கோபம் அடைந்த முத்துப்பாண்டி, வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து ஜோதியம்மாளை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ஜோதியம்மாள் அலறியபடி கீழே சாய்ந்தார்.
அப்போது அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டு வர, முத்துப்பாண்டி தப்பி ஓடினார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜோதியம்மாளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்
. இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய முத்துப்பாண்டியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.