தொடரும் பஞ்சமி! ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு: ராமதாஸ் மிரட்டல் பதில் நோட்டீஸ்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
stalin ramadoss - 2026

டாக்டர் ராமதாஸ் குறித்து அவதூறுக் கருத்து கூறியதாகக் குறிப்பிட்டு, ஆர்.எஸ்.பாரதிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. ராமதாஸ் சார்பில், அவரது வழக்கறிஞர் கே.பாலு இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

இது குறித்து பாமக., தரப்பில் தெரிவிக்கப் படுவதாவது…

முரசொலி பஞ்சமி நிலம் குறித்த விசாரணைக்காக சென்னை சாஸ்திரி பவனில் எஸ்.சி/எஸ்.டி ஆணையம் முன் நேர்நின்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மருத்துவர் அய்யாவுக்கு 1000 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அவை யார், யார் பெயரில் உள்ளன என்பது அவர் மீது முரசொலி விவகாரத்தில் அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் போது தெரியும் என்றும் கூறியிருந்தார்.

உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டை முன்வைத்த அவர் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்; இல்லாவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்து மருத்துவர் அய்யா சார்பில் அவரது வழக்கறிஞர் கே.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

“இந்த பிரச்சனையை முதன் முதலாக கிளப்பிய டாக்டர் ராமதாஸ் மீதும் அவதூறு வழக்கு போட இருக்கிறோம். அவருடைய ஆயிரம் ஏக்கர் நிலம் யார் யார் பெயரில் இருக்கிறது என்பது வழக்கு போடும் போது தெரியும். அவதூறு வழக்கு போடும் போது இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வரும்.” – என்று ஆர்.எஸ்.பாரதி அப்போது குறிப்பிட்டிருந்தார்.

அவரது குற்றச்சாட்டு, அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. இதனால் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, மருத்துவர் ராமதாஸ் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தாகக் கூறி, இந்த அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

1 thought on “தொடரும் பஞ்சமி! ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு: ராமதாஸ் மிரட்டல் பதில் நோட்டீஸ்!”

  1. ப ம க வெற்றி பெறும் ஸ்டாலின் அம்போ அம்போ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.