திருமணமாகி ஆறே மாதம்! கொரோனாவால் இளைஞர் உயிரிழந்த சோகம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை
corono-dead-body-2

திருநெல்வேலி அருகே திருமணமாகி ஆறு மாதம் கூட தாண்டாத நிலையில் புதுமாப்பிள்ளை கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மட்டும் 117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,729 ஆக அதிகரித்துள்ளது. 5,675 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்குச் செல்ல, 1,444 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த நகைக்கடை அதிபரின் 28 வயதான மகன் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது

வாழ்க்கையை புதிதாக தொடங்கிய இவருக்கு சந்தோஷம் என்பது அவரது வாழ்வில் 6 மாதம் கூட நீடிக்கவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு லட்ச கணக்கில் பணம் செலவு செய்து சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புதிதாக திருமணமான இளைஞர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.