4வது போட்டி: நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

உலகம் விளையாட்டு
newzeland - 2026

இந்தியாவுடனான நான்காவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

5 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே மூன்றில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது. இந்நிலையில் நான்காவது போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 30.5 ஓவரில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

ரோகித் சர்மா 7 ரன்னும் ஷிகர் தவான் 13 ரன்னும் எடுத்து ஏமாற்றினார். தொடர்ந்து கில் 9 ரன்னும் அம்பத்தி ராயுடு தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமலும் கேதர் ஜாதவ் ஒரு ரன்னும் எடுத்து பெரும் ஏமாற்றம் அளித்தனர்

ஹர்திக் பாண்டியா 16 ரன்னும் புவனேஸ்வர் குமார் ஒரு ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 15 ஷாகல் 18 கலீல் அகமத் 5 ரன்கள் எடுக்க இந்திய அணி 31வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இதைத் தொடர்ந்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 15-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் குப்தில் 14 ரன்னும் நிக்கோலஸ் 30 ரன்னும் எடுத்தனர். வில்லியம்ஸ் 11 டைலர் 37 ரன்னும் எடுத்தனர் இதன் மூலம் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.