“டேய் வாடா… செருப்ப கழட்டி விடுடா…” – பழங்குடிச் சிறுவனை ஏவிய அமைச்சர் சீனிவாசனால் சர்ச்சை!

சற்றுமுன்
dindukkalseenuvasan - 2026

‘டேய் வாடா, செருப்ப கழட்டுடா!’- சிறுவனை அழைத்து தான் அணிந்திருந்த செருப்பை கழற்ற வைத்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்! முதுமலை யானைகள் முகாமை தொடங்கி வைக்க சென்ற அமைச்சர் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடி சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றச் சொன்னதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. #TamilNadu #dindigulsrinivasan

நீலகிரி மாட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், வனத்துறை வளர்ப்பு யானைகளுக்கான ‘சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம்’ வியாழக்கிழமை இன்று காலை தொடங்கியது. முகாமை தொடங்கி வைக்க வந்தார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்! பாதுகாப்பு அதிகாரிகள், நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகளுடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். ஆனால் செருப்பை அணிந்து கொண்டு நடப்பதில் ஏதோ சிரமத்தை உணர்ந்தார்.

அப்போது, அந்தப் பகுதியில் இருந்த சிறுவன் ஒருவனை அழைத்த அமைச்சர் சீனிவாசன், தனது செருப்பை கழற்றி விடும்படி கூறினார். சற்று அச்சத்துடன் அவரை நெருங்கி வந்த அந்தச் சிறுவனும் செருப்பை கழற்றினான். பாதுகாப்பு அதிகாரிகளும் செருப்பை சரி செய்து கொடுத்தனர். இது குறித்த வீடியோ வைரலாகி, இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.