உதகை: நீலகிரி மாவட்டம், பாட்டவயல் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவரை புலி ஒன்று தாக்கியது. இதில் படுகாயமடைந்த அந்தப் பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில், அந்தப் புலி குறித்த அச்சம் அப்பகுதி மக்களிடம் அதிகரித்தது. ஏற்கெனவே கடந்த வருடத்தில் பிப்ரவரி மாதம் இதே போல் புலி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது. இதேபோல், இந்தப் புலியையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் புலியைப் பிடிக்க 10 அதிரடிப்படை பிரிவுகள் செயல்பட்டு வந்தன. இத்தகைய சூழ்நிலையில், கூடலூர், பிதர்காடு பகுதியில் பதுங்கியிருந்த ஆட்கொல்லி புலியை அதிரடிப்படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.
உதகை அருகே ஆட்கொல்லி புலி சுட்டுக் கொலை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari