
திருநெல்வேலி கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சென்னையில், ‘ஹெல்மெட்’ அணியாமல் கார் ஓட்டியதாக போக்குவரத்து போலீசார், 1,000 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் தேன்ராஜா, 54; தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையில் திரிபவர்களை அழைத்து வர ‘அம்பாசிடர்’ கார் வைத்துள்ளார்.
நவ., 2ம் தேதி இவர் சென்னையில், ‘ஹெல்மெட்’ அணியாமல் டூ வீலர் ஒட்டியதாக, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அவருக்கு குறுஞ்செய்தி வந்தது. டூ வீலர் என குறிப்பிட்டு, ஒருவர் ஹெல்மெட் அணியாமல் செல்வது போன்ற படத்தையும் அவருக்கு அனுப்பி இருந்தனர். டூ வீலரின் எண் என, இவரது கார் எண்ணை குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து, சென்னை போலீசில் தகவல் கேட்டார். ஆனால், அவருக்கு முழுமையான தகவல் தரப்படவில்லை. தமிழகம் முழுதும் புதிய போக்குவரத்து விதிகளை அமல்படுத்துவதாக கூறும் போலீசார், வாகன எண்களை சரியாக கவனிக்காமல் தவறுகளை செய்கின்றனர். அவர்கள் அனுப்பியிருந்த படத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவரின் டூ வீலர் எண், TN 64 -C —- ஆக இருக்க வாய்ப்புள்ளது. அது ஒரு ஹீரோ ஹோண்டோ டூ வீலர். அதன் உரிமையாளர் பெயர், மதுரையைச் சேர்ந்த ஜோதிமுருகன் என, உள்ளது. இருப்பினும், அந்த எண் தெளிவில்லாமல் உள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர், திருநெல்வேலி டவுனில் காரில் சென்ற போது, காரில் அதிக பாரம் ஏற்றிச் சென்றதாக திருநெல்வேலி டவுன் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குறிப்பிட்ட டாக்டருக்கும் அபராதம் விதித்து, ‘நோட்டீஸ்’ வந்தது. டாக்டர் இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். போலீசார் விசாரித்த போது, அதிக பாரம் ஏற்றிச்சென்ற ஒரு லோடு ஆட்டோவின் எண்ணுக்கு பதிலாக, டாக்டர் காருக்கு அபராதம் விதித்தது தெரியவந்தது.
இதே போல திருநெல்வேலி டவுனில் போக்குவரத்து போலீசார் அலைந்து திரிந்து வழக்கு போடுவதற்கு பதிலாக, நெருக்கடியான நெல்லையப்பர் கோவில், இருட்டுக்கடை அல்வா கடை பகுதியிலேயே முகாமிட்டு, முறையான நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தியிருந்தாலும், எதையும் விசாரிக்காமல் போலீசார் அபராதம் விதிப்பதாக புகார் எழுந்துள்ளது. நிர்வாகக் கோளாறினால் நீதிச்சுமையில் தள்ளாடும் திமுக அரசு மக்களிடமிருந்து எப்படியெல்லாம் பணம் பிடிக்கலாம் என்று பார்க் றது. இதுவும் திராவிட மாடலோ !