எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை நீடிப்பு…

Published:

FB IMG 1667533719235 - 2026

கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் காரைக்குடி வழியாக இயங்கிக் கொண்டிருக்கும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயிலின் சேவை இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டது.

தற்பொழுது சனிக்கிழமை தோறும் இயங்கிக் கொண்டிருக்கும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயிலின் (வண்டி எண் : 06035) சேவையானது வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மறுமார்க்கத்தில் தற்பொழுது ஞாயிற்றுக்கிழமை தோறும் இயங்கிக் கொண்டிருக்கும் வேளாங்கண்ணி – எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலின் (வண்டி எண் : 06036) சேவையானது ஜனவரி 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்கியுள்ளது.

images 56 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img