தைப் பூசத்துக்கு அரசு விடுமுறை விட வேண்டும்: நாம் தமிழர் சீமான்

மதுரை:
தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தினார்.
மதுரைக்கு வெள்ளிக்கிழமை வந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது…

தமிழ் கடவுளான முருகனுக்கு கொண்டாடப்படும் தைப்பூசம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் இதை கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் பிறமொழி திருவிழாக்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதே போல் தமிழர் திருநாளான தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை வரவேற்கிறோம். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.