தமிழக அமைச்சர் அலுவலகத்தில் குண்டு வீச்சு

 
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லுார் ராஜூவின் மேற்குத் தொகுதி சட்டமன்ற அலுவலகம் நேற்று இரவு 12 மணியளவில் இரண்டு மர்மநபர்கள் அலுவலகத்தின் மீது அடுத்தடுத்து குண்டு வீசியுள்ளனர்.
நாகேந்திரன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துணை ஆணையாளர்கங்காதர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதில் அலுவலகத்தின் கதவு தீ பிடித்து சேதம் அடைந்தது .மேலும் அலுவலகம் முன் கண்ணாடி துகள்கள் சிதறி கிடக்கின்றது.
இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் அலுவலகத்தின் கதவு சேதமடைந்ததுள்ளதாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது .
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசியதில் கோயில் அருகே உள்ள சுவர் சேதமடைந்தது. இந்நிலையில் அமைச்சர் அலுவலகத்தின் மீதும் அதிமுக அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.