வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் கார்டு ? : சுஷ்மா சுவராஜ்

 
மத்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் கார்டு வழங்க இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
சுஷ்மா சுவராஜ் மேலும் கூறியதாவது : –
மத்திய அரசு இதுவரை 92 கோடி இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டையை வழங்கியுள்ள நிலையில், விரைவில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட உள்ளது
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் சாதனைகளை இந்தியாவிற்கு உரித்தாக்குகின்றனர். இது இந்தியாவிற்கு பெருமையாக உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களை பாதுகாப்பது அரசின் கடமை.
எனவே விரைவில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் கார்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறிள்ளார் .