அதிமுக உள்கட்சி பூசல் காரணமாக தமிழக அமைச்சர் அலுவலகத்தில் குண்டு வீச்சா ?

 
தமிழகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அலுவலகத்தில் நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்றாலும், பல கோண தகவலின் படி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர் .
செல்லூர் ராஜூவின் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற அலுவலகம் காளவாசல் மதுரை சம்மட்டிபுரம் நுழைவு பகுதியில் உள்ளது ,கட்சி அலுவலகம் பனகல் தெருவில் உள்ளது இரண்டு இடங்களிலும் நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்நேரத்தில் அலுவலகத்தில் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.போலீசார் இது தொடர்பாக அதிமுக வை சேர்ந்த சிலரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர் .
மதுரை மாநகர ஆணையாளர் சைலேஷ் குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் . மேலும் முழு விவரம் குறித்து தற்போது ஏதும் கூற முடியாது, விசாரணை போய் கொண்டிருக்கிறது என்று மட்டும் செய்தியாளர்களிடம் கூறினார்.
மதுரையில் அதிமுக கட்சியினரிடையே வெகு ஆண்டுகளாக உள்கட்சி பூசல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
அதன் காரணமாக செல்லூர் ராஜூவின் செயல்பாட்டின் மீது வெறுப்படைந்துள்ளவர்கள் இந்த குண்டு வீச்சு சம்பவத்தை நடந்திருக்கலாம் என்று பரவலாக கூறப்படுகிறது .