திண்டுக்கல் லியோனி சாலை விபத்தில் மரணமா ! ?

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி சாலை விபத்ததில் அகால மரணம் அடைந்ததாக இன்று யாரோ ஒரு விஷமி வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளார்.

 

அவ்வாறு பரவிவரும் செய்தியில் லியோனி காரில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதல் மோதியதில் லியோனி இறந்ததாகவும் அந்த செய்தியை சரிபார்த்து கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

ஊடகதுறையினர் திண்டுகல் லியோனியை அவரது கைப்பேசியில் உடனடியாக தொடர்பு கொண்டபோது திண்டுகல் லியோனியே கைப்பேசி அழைப்பை எடுத்தார்.மேற்படி வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் செய்தி பற்றி கூறியமைக்கு லியோனி அது தவறான தகவல் என்றும் திண்டுக்கல்லில் அவரது வீட்டில் நலமாக இருப்பதாகவும் சிரித்து கொண்டே கூறியுள்ளார்.

 

சமீப காலமாக சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரவிட்டு வதந்தியை பரப்புவது அதிகரித்துள்ளது.

 

வதந்தியை பரப்புவோர் மீது காவல் துறையினர் உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை தானாக முன் வந்து எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு .

 

திண்டுக்கல் லியோனியுடன் சாலை விபத்து குறித்து ஊடகதுறையினர் அவரது கைப்பேசியில் பேசிய உரையாடல் ஒலிப்பதிவு லியோனி புகைப்படம் இணைக்கப்பட்ட காணொளியாக இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.