spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்பழ.கருப்பையா முழுவதுமாக அரசியலுக்கு முழுக்கு போட போகிறாரா ?

பழ.கருப்பையா முழுவதுமாக அரசியலுக்கு முழுக்கு போட போகிறாரா ?

 
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை துறைமுகம் தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தான் நீக்கப்பட்டது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது,சட்டமன்ற உறுப்பினர் ஆக வருவதற்கு காரணமான முதலமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாக கூறிய அவர், தன்னை கட்சியில் இருந்து நீக்கியது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
“நிகழ்ச்சியில் நான் பொதுவாக பேசியது முதலமைச்சருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் என நினைக்கிறேன். கட்சியில் இருந்து நீக்கியதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறன். அதேசமயம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதே நெறிசார்ந்த அரசியல். அதனால் நான் ராஜினாமா செய்துவிட்டேன். இதுதொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிவிட்டேன்” என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பேசிய அதிமுக-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா. பொதுவாக அனைத்து கட்சி பொதுக்குழுக்களில் ஏகமனதாகவே தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். மந்திரிகள் கொள்ளையடிக்கிறார்கள், கீப் வீட்டுக்கு போவதுகூட பொதுப்பணி என்பதாகிவிடுகிறது என சரவெடியாக தாக்கிப் பேசியிருந்தார். இந்த நிலையில் அவர் இன்னமும் அதிமுக-வில் தொடர்ந்து நீடிக்கிறார் என்பதுதான் அதிசயமாகவும் அனைவராலும் பார்க்கப்படுகிறது.
சென்னையில் துக்ளக் ஆண்டுவிழாவில் பழ. கருப்பையா பேசியதாவது :-
 
இந்த நாட்டில் பெரிய கேடு வந்ததற்குக் காரணம் அரசியல்வாதியும், அதிகாரவர்க்கமும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்ததன் விளைவுதான். அரசியல்வாதிகள் இன்று ஊழல் செய்யக் காரணம், அவர்களை அதிகாரிகள் வளைத்துப்போட்டு ருசி காண்பித்துவிட்டார்கள்.
 
இன்று மந்திரியும், தலைமைச்செயலாளரும் கூட்டுச் சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அவர்கள் எவ்வளவு பேச உரிமை உள்ளவரோ, அவ்வளவு உரிமையோடு பேசுவதற்கு உரிமை உடையவர் சரத்குமார். இப்போது, அமைச்சர்கள் என்றால் அடாவடித்தனம் வந்துவிடுகிறது.
 
ஐந்தாறு பி.ஏ-க்கள் வைத்துக்கொள்கிறார்கள். சால்வை எடுக்கக்கூட ஒரு பி.ஏ இருக்கிறார். இன்றைக்கு, பதவிகளில் இருப்பவர்கள், தங்களுடைய கீப் வீடுகளுக்குப் போகும்போதுகூட பாதுகாப்பு வண்டிகளோடு செல்கிறார்கள். காரணம், அதுவும் பொதுப்பணிதான் என்கிறார்கள். எஸ்கார்ட் வண்டியையும், சர்க்யூட் ஹவுஸையும் எடுத்துவிட்டால் ஒருவரும் அமைச்சராக இருக்க விரும்பமாட்டார்கள்.
 
ஒரு கூட்டம் கூட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். இப்போது, யாருக்கும் கூட்டம் வருவது இல்லை. கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். மாவட்டம், வட்டம் எல்லாம் எதற்கு இருக்கிறார்கள்? வாகனங்களில் கூட்டத்தை அழைத்து வரத்தானே? எந்தப் பொதுக்குழுவில் எந்தத் தீர்மானம் விவாதிக்கப்படுகிறது? எல்லாம் ஏக மனதாகத்தானே நிறைவேற்றம் நடக்கிறது.
 
புருசன் பொண்டாட்டியே ஒத்துப்போகாத காலத்தில், இத்தனை பேர் எப்படி ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்? அதனால்தான், நாட்டில் வளர்ச்சி இல்லை. எந்தக் கருத்தும் எதிர் கருத்தால்தான் வளர்ச்சி பெறும். முதல் கருத்தும், எதிர் கருத்தும் மோதும்போது புதிய கருத்து பிறக்கும். அந்தப் புதிய கருத்துக்கும் எதிர் கருத்து உருவாகி, மீண்டும் புதிய கருத்து உருவாகும். இதுதான் வளர்ச்சி. ஆனால், இங்கு எதிர் கருத்து என்பதே கிடையாது. இங்கு எந்த அரசியல் கட்சியின் பொதுக்குழுவிலும் தீர்மானத்தை விவாதிப்பது இல்லை. தீர்மானத்தைப் படிக்கிறார்கள். பிறகு எதற்கு ஜனநாயகம்? ஒரு குடைக்குள் ஆளும் மன்னர்களாகத்தான் எல்லாக் கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள். சமுதாயம் சந்தைப்பொருளாகி, கடவுளையும் சந்தைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். கடவுள் நம்பிக்கை கெட்டுப் போய்விட்டது.
 
மதங்கள் நிறுவனங்களாகிவிட்டன. உண்டியல் பணமே மந்திரிகளுக்குப் போகிறது. அதிகார வர்க்கம் ஒத்துழைக்காமல் இவர்கள் ஓர் அணாகூட கொள்ளையடிக்க முடியாது. சுடுகாட்டில் படுத்து உறங்கும் நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நாடு கெஜ்ரிவாலைத் தேடி அலைகிறது என்றால், நாடு எந்த நிலையில் உள்ளது என்று பாருங்கள். நல்லவன் என்று யாரைக் கண்டாலும் நாட்டை ஆளக் கூப்பிடுகிறார்கள்.
 
சங்ககாலத்தில் பா வீடு என்று உள்ளது. அதாவது, ஒரு நாட்டு மன்னன் பக்கத்து நாடு படையெடுத்து அங்கிருக்கும் ஆநிறை உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்து, அதை தனது படை வீரர்கள் முதல் ஜோதிடர் வரை பிரித்துக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. அந்த நிலை இந்த நாட்டில் மீண்டும் திரும்பியுள்ளது. மந்திரி கொள்ளையடித்து தொண்டர்கள் முதல் மாவட்டம், வட்டம் என அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு பழ. கருப்பையா பேசினார்.
 
இவ்வளவு விமர்சித்த பின்னரும் பழ. கருப்பையா, அதிமுகவில்தான் நீடிக்கிறார். துக்ளக் ஆண்டுவிழா விழா என்பதால் அதன் ஆசிரியர் ‘சோ’ சங்கடப்படுவாரோ என நினைத்து பழ. கருப்பையா மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா? எனும் கேள்வியும் எழுந்தது.
அந்த செய்தியை தமிழக சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையாவை கண்டு அதிமுக தலைமைக்கு அச்சமா ? எனும் தலைப்பில் 21-01-2016 அன்று நமது dhinasari.com இணைய தமிழ்ச் செய்தித் தளத்திலும் வெளியிட்டு இருந்ததை அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் நேற்று ஜெயலலிதா அ.தி.மு.க. வில் இருந்து பழ. கருப்பையா நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
என்னதான் தற்போது பழ. கருப்பையா. மிக நாகரிகமாக முதலமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாக கூறினாலும் அவருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க.சேர்ந்த கட்சியினர், தமிழக அமைச்சர்கள் செய்யும் ஊழல் அட்டகாச அராஜகங்களை பொறுத்து கொள்ள முடியாமல் தான் இருந்து வந்தாக அவரது நெருங்கய நட்பு வாட்டர தகவல்கள் கூறுகிறது.
இன்றைய காலத்தில் நடைபெறும் அரசியல் மற்றும் மேற்படி காரணகங்களால் பழ. கருப்பையா அ.தி.மு.க. வில் இருந்தும் அரசியலில் இருந்து இன்னும் சில தினங்களில் விலகி விடலாம் என நினைத்து அறிவிப்பு செய்ய ரகசியமாக திட்டமும் போட்டுவந்தாரம். அந்த தகவலும் எப்படியோ முதலமைச்சர் ஜெயலலிதாவும் கசிந்து போயிருக்க கூடும் என்றே சொல்லப்படுகின்றது
மேற்படியான ரகசிய தகவலை அடுத்தும், தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் பழம் பெரும் அரசியல்வாதியான பழ. கருப்பையா அவராக அ.தி.மு.க. வில் இருந்து விலகுவதாக அறிவித்தால் அதனால் ஏதேனும் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு உருவாகுமோ என ஜெயலலிதா நினைத்து இருக்க கூடும் .
அதனால் முதலமைச்சர் ஜெயலலிதா பழம் பெரும் அரசியல்வாதியான பழ. கருப்பையாவை கட்சியிலிருந்து நீக்கி இருக்கலாம் என்றும் பேசப் படுகிறது .
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள இந்த நிலையில் அரசியலுக்கு முழுவதுமாக முழுக்கு போட்டு அரசியல் வாழ்கையை விட்டு ஒதுங்கி விடுவார் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் தற்போது பழ. கருப்பையாவை சைவ சித்தார்ந்த பணிகளிலும் . நூல்கள் எழுதி வெளியிடுவதிலும் அவரது நாட்டம் அதிகமாக சென்று கொண்டு இருக்கிறது . அதனால் மேற்படியான பணிகளுக்காகவே அவரது நேரத்தை இன்னும் அதிக மாக செலவிடுவார் என தெரிகிறது .
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் எத்தனையோ பேர் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாதவர்கள் சட்டத்திற்கு விரோதமாக சுயநல நோக்கத்தில் மக்களின் வரி பணத்தை முறைகேடுகள் செய்து கொள்ளை அடிக்கவே உலகை சுற்றி வலம் வந்து கொண்டுள்ளனர் .
அதற்காக மானம் மரியாதையை இழந்து அவர்கள் உள்ள கட்சி தலைமைக்கு ஜால்ரா தட்டிக் கொண்டு கொத்தடிமைகளாக இருந்து வரும் இன்றைய காலத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு அந்த கட்சியினர் செய்யும் அராஜகங்களை எதை கண்டும் அஞ்சாமல் மிக தைரியமாக பழ.கருப்பையா சரவெடியாக உலகினருக்கு வெட்ட
வெளுச்சமாக காட்டிய பழ.கருப்பையாவை அனைவரும் பராட்டாமல் இருபார்களா என்ன ?
எது எப்படியோ அ.தி.மு.க.வில் இருந்து விலகிய பழ.கருப்பையா வரும் நாட்களில் நாடும் சமூகமும் வளர்ச்சி அடைய லஞ்சம்.!! ஊழல்.!! அநீதி.!! குற்றங்களுக்கு எதிராகவே செயல்படுவார் என அனைவரும் கருதுவார்கள் !
 
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய பழ.கருப்பையா
வெளியில் எவருக்கும் தெரியாத அ.தி.மு.க.வில் நடைபெற்ற அவருக்கும் மட்டும் தெரிந்த அராஜகங்களை இன்னும் சில தகவலை வரும் நாட்களில் சொல்லாமல்
இருக்கவா போகிறார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe