அக்னியானது விறகுக் கட்டைகளையும் தன்னிடம் ஆஹுதியாக்கப்படும் அனைத்து வஸ்துக்களையும் பொசுக்கிவிடுவது போல்… உத்தமமான புகழ் படைத்த ஸ்ரீஹரியின் நாமசங்கீர்த்தனம் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்துவரும் அனைத்துப் பாவங்களையும் பொசுக்கிப் பொடிப்பொடியாக்கி நம் உத்தம குணங்கள் மேலோங்குவதற்கு உறுதுணையாக இருக்கும். நாமசங்கீர்த்தனத்தின் மற்றொரு பெருமை பகவானே அந்தந்த நாமங்களின் வசப்பட்டு நம்முள் அவரே ஈர்க்கப்பட்டு நம்மைத் தன கைக்கருவியாகப் பயன்படுத்தி செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்கும் வல்லமையை நமக்கு அருள்வதுதான் ! ஓதுவோம் ஹரியின் நாமங்களை அனவரதமும் ! வணங்கிப் பணிவோம் அவன் திவ்ய பாதங்களை ! காத்தருள்வான் என்றே சித்தம் தெளிந்திருப்போம் !
நாமசங்கீர்த்தனத்தின் அவசியம் !
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari