
பேய்க்குளத்தில் ஆட்டோ ஓட்டுநர் திங்கள்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ஜெயக்குமார் (38) . இவருக்கு மனைவி வசந்தி (32) மற்றும் 1மகன் , 2மகள்கள் உள்ளனர். ஜெயக்குமார் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மேலும் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கும் ஓட்டி வருகிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற ஆறாவது வார்டு உறுப்பினராக இருந்தார்.
திங்கள்கிழமை இரவு ஜெயக்குமார் பெட்டிக்கடையில் இருந்த போது 3 பைக்கில் அடையாளம் தெரியாத 8பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர்.
பின்னர் 8 பேர்களும் அரிவாளால் ஜெயக்குமாரை சரமாறியாக வெட்டியதாக கூறப்படுகிறது. அதில் ரத்த வெள்ளத்தில் ஜெயக்குமார் சம்பவ இடத்தில் இறந்து போனார். தகவல் அறிந்து சாத்தான்குளம் டிஎஸ்பி (பொறுப்பு ) பிரதாபன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் கொண்ட காவல்துறையினர் விரைந்து சென்று அவரை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி,.அருண்பாலகோபாலன் சம்பவ இடத்தை பார்வையிட்டு மேல் விசாரணை நடத்தினார். விசாரணையில் இக்கொலை முன்விரோதத்தில் நடந்துள்ளதா என காவல்துறையினர் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக குற்றவாளியை பிடிக்க காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.