
பிரபல ஆபாச பட நடிகர் ரான் ஜெர்மி 4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆபாச பட உலகில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் நடித்தவர் ரான் ஜெர்மி. இவர் கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டிற்குள்ளான கால கட்டத்தில் 4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு 25 வயதான பெண் ஒருவரை தனது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு 2 பெண்களையும், 2019ம் ஆண்டு ஒரு பெண்ணையும் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 90 ஆண்டுகள் வரை அவருக்கு தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.