shencottaian

ஆன்லைன் வகுப்பு முறைகளை ஒழுங்குபடுத்த பள்ளிக்கல்வித்துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அடுத்த கல்வி ஆண்டுக்காக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனிடையே ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது.

அது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆன்லைன் வகுப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மத்திய அரசின் கருத்துக்கள் வந்தவுடன் அதைப்பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கவில்லை எனவும், அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending