October 21, 2021, 1:56 pm
More

  ARTICLE - SECTIONS

  எக்காரியம் ஆயினும் ஈடுபாடு அவசியம்! ஆச்சார்யாளின் அன்றாட நிகழ்வு சொல்லும் பாடம்!

  abinav vidhya theerthar

  ஆச்சார்யாள் தென்னந்தோப்பில் அமர்ந்திருக்கும் பொழுது விதுர நீதியில் முதல் 50 ஸ்லோகங்களையும் சங்கர பகவத்பாதாள் இயற்றிய குறிப்பிட்ட ஸ்லோகங்களையும் படிக்குமாறு சிஷ்யரைக் கேட்டார்

  விதுரநீதி ஸ்லோகங்களை அவர் படிக்க ஆரம்பித்ததும் ஆச்சாரியாள் தனது விழிகளை மூடிக் கொண்டார் 22 வது ஸ்லோகத்தில் இருக்கும் பொழுது திடீரென்று ஒரு ஓசை சிஷ்யரின் காதில் விழுந்தது அவர் திரும்பிப் பார்ப்பதற்குள் அங்கிருந்த ஒரு தென்னை மரத்தின் ஓலையும் தேங்காயும் ஆச்சாரியாள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து 3 அடி தூரத்திற்குள் பொத்தென்று தரையில் வந்து விழுந்தன.

  அவருடைய மனம் ஸ்லோகங்களை கருத்தில் முழுவதுமாக நிலைபெற்றிருந்தது தம்மை சுற்றி நடக்கும் வேறு எதைப் பற்றியும் அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

  விதுர நீதியில் ஸ்லோகங்களை படித்து முடித்ததும் மனீஷா பஞ்சகம் பிரமஹ்மானு சிந்தனம் போன்ற பகவத் பாதரின் நூல்களை வாசிக்க ஆரம்பித்தார் அந்த சிஷ்யர். சரீரத்தில் எவ்வித அசைவுமின்றி முகத்தில் லேசான புன்னகை மட்டும் தவிர ஆச்சாரியாள் அவற்றை கேட்டார்.

  படித்து முடித்து சில மணித்துளிகள் கழித்து ஆச்சாரியார் கண்களைத் திறந்தார். திடீரென்று அவர் வலியால் துடித்தார் சிஷ்யரால் பார்க்கப்படாமல் ஆச்சார்யாரால் உணரப்படாமல் ஒரு பெரிய எறும்பு படையே அவருடைய கைகளையும் கால்களையும் அத்தனை நேரம் கடித்துக்கொண்டிருந்தன.

  abinav vidhya theerthar

  மென்மையான அவருடைய பாதங்கள் சிவந்து வீங்கி விட்டன அவர் கேட்டுக் கொண்ட அத்தனை ஸ்லோகங்ங்களும் அவருக்கு மனப்பாடமாகத் தெரியும் நூற்றுக்கணக்கான முறைகள் அவர்தம் மனனமாக ஸ்லோகங்களை கூறியிருக்கிறார்

  இருந்தாலும் தமக்கு அருகில் ஏற்பட்ட பெரிய ஓசையும் உடம்பில் ஏற்பட்ட உபாதையும் அறியாத அளவிற்கு அவருடைய மனம் முழுவதுமாக ஸ்லோகங்களின் கருத்தில் ஒன்றி இருந்தது தாம் எடுத்துக் கொண்ட எந்த ஒரு காரியத்திலும் அவர் கவனமற்று இருந்ததே கிடையாது.

  ஒருவன் தன்னுடைய எல்லா காரியங்களையும் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும் சிறிய காரியமாக இருந்தாலும் அதை அஜாக்ரதையோடு செய்யக் கூடாது அதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் குறைவாக இருந்தாலும் மற்ற காரியங்களுக்கு இதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருந்தாலும் அந்த காரியத்தை செய்ய முற்பட்டதும ஒருவன் அதை முக்கியமானது என்றுதான் கருதவேண்டும். என்பதற்கான ஒரு சான்றாக திகழ்ந்தார்

  ஆச்சாரியார் சாதாரணமாக பருத்தித் துணியில் தயாரித்த காவி நிற கைக்குட்டை தான் பயன்படுத்துவது வழக்கம். அடிக்கடி அது கசங்கிபோய் விடும் இருப்பினும் அதை மீண்டும் பழைய மாதிரியே மடித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் ஆச்சார்யாளுக்கு இருந்தது.

  அவர் அதை மடித்து முடித்ததும் அதன் எல்லா ஓரங்களிலும் சீராக ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதை பார்க்கும் பொழுது அது நன்கு துவைத்து சலவை செய்யப்பட்ட புது துணியை போல் காட்சி தரும் மற்ற எல்லா காரியங்களையும் நிறுத்திவிட்டு எழுந்து துணியை மட்டும் மடித்துக் கொண்டிருந்தார் என்றும் கூறுவதற்கில்லை.

  முக்கியமான உபன்யாசங்கள் நிகழ்த்தும்போது அல்லது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஆச்சாரியார் தமது கைக்குட்டையை நேர்த்தியாக மடித்து இருக்கிறார்.

  அவர் தம்முடைய மாலை நேர ஆஹ்நீக வழிபாட்டின்போது ஒரு பாத்திரத்திலிருந்து உத்தரணியால் சிறிது தண்ணீர் எடுத்து ப்ரணவத்தை சொல்லிக்கொண்டே அதை மற்றொரு பாத்திரத்தில் விடுவார் தனக்கு விதிக்கப்பட்ட நெறிகளின்படி பிரணவம் சொல்லும் போது அர்க்கியபிராதனத்தை அவர் நூறு தடவைக்கு மேல் செய்வார்.

  abinav vidhya theerthar

  அவ்வாறு பலமுறை ஊற்றும் போதும் நீரை எடுத்து வைக்கும் போதும் ஒரு சொட்டு நீர் கூட தரையில் சிந்தாதவாறு அவர் செயல் புரிவது பார்க்க மிக அழகாக இருக்கும் அவருடைய கை அசைவும் வேண்டிய அளவிற்கு மட்டும் மிகக் குறைந்தபட்சமாக இருக்கும்.

  அர்க்கியம் கொடுக்கும் வேகமும் பிரணவத்தை சொல்லும் பாங்கும் ஒன்றாக இணைந்திருக்கும் அவருடைய வழிபாட்டு அறைக்குள் செல்ல பொது ஜனங்களுக்கு அனுமதி இல்லை.

  ஆகையால் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காக அவர் நேர்த்தியாக புரிந்தார் என்று சொல்வதற்கில்லை. அது அவர் இயல்பு ஒரு காரியத்தை நாம் எவ்வளவு சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதும் அறிந்து கொள்ள இது நமக்கு பாடமாகிறது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,573FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-