மருத்துவர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரவேண்டும்: டாக்டர் தமிழிசை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
tamilisai 2 - 2026

அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வர வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டில் கூறியுள்ளார்.

அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தம் தொடர்பில் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ள வேண்டுகோளில்…

ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையை பாதிக்கும் என்பதால் அரசு மருத்துவர்களும் அரசும் அமர்ந்து பேசி உடனே தீர்வு காண வேண்டும்! கோரிக்கைகள் நியாயமானவையாக இருந்தாலும் அரசு மருத்துவ மனை களையே நம்பியிருக்கும் ஏழை நோயாளிகள் சிகிச்சை எந்தவிதத்திலும் பாதிக்கக் கூடாது! வேலைநிறுத்தம் தவிர்க்கப் பட வேண்டும்.! – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.