spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்குருஜியின் பார்வையில்... மதிப்புக்குரிய புருஷோத்தமன் ஸ்ரீராமனும், ‘ராம ராஜ்யமும்’!

குருஜியின் பார்வையில்… மதிப்புக்குரிய புருஷோத்தமன் ஸ்ரீராமனும், ‘ராம ராஜ்யமும்’!

- Advertisement -
ramarajyam guruji

நாகபுரியின் புகழ்பெற்ற யாதவராவ் ஜாம்தாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ‘வால்மீகியின் ராமனும், அவனது அரசியலும்’ என்ற ஆங்கில நூலுக்கு 1949, டிசம்பர்,2 அன்று, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இரண்டாவது தலைவர் குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர், ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையின் மொழிபெயர்ப்பு
(ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம்: தொகுதி 6)


மதிப்புக்குரிய புருஷோத்தமன் ஸ்ரீ ராமன்!

பாரதியர்களுக்கு ஸ்ரீ ராமர் ஒரு லட்சிய புருஷன் மகோன்னதமான மனிதன் என்பதற்கு முன்னுதாரணம் மனிதன் தனது வலிமையினால் எவ்வளவு மகோன்னதமான நிலையை அடைய முடியும் என்பதை புருஷோத்தமன் ஸ்ரீ ராமனின் பாத்திரப் படைப்பின் மூலம் விளக்கியுள்ளனர்.

ஸ்ரீ ராமபிரானின் வாழ்க்கை வரலாற்றைப் பாடிய கவிஞர் வால்மீகி, ராமருடைய ‘அவதாரத்தில்’ நம்பிக்கை உடையவராக இருந்தும், முயற்சியுடன் உள் ரகசியமயமான அவரை அற்புத, தெய்வீக குணங்கள் நிறைந்த அவதாரமாக சித்தரிக்காமல், மனிதனின் குணங்கள், மனிதனின் உணர்வுகள், மனிதனின் வலிமை படைத்த மானுடனாகவே சித்தரித்துள்ளார்.

ராமாயணம் எனும் பெருங்காப்பியம் எத்தகைய மனிதர்களுக்காக உருவாயிற்றோ, அந்த மனிதர்களின் மன இயல்பை, ஒரு துறவியாகவும் ஞானியாகவும் இருந்த காரணத்தால் வால்மீகி நன்கு உணர்ந்திருந்தார். மிகவும் சிறந்த அவதாரம், நாம உச்சரிப்புக்கு மட்டுமே அல்லாமல் பின்பற்ற முடியாது என்ற மன உணர்வால் மக்கள் பீடிக்கப்பட்டிருந்தனர். இந்த பலவீனத்தின் காரணமாக அவர்கள் கிணற்றுத் தவளைகளாக, செயலற்று அவர்களுக்கு அழிவு ஏற்படுகிறது. அதன் விளைவாக மனிதன் உயர்ந்த நிலையை எட்ட முடிவதில்லை.

இவ்வுலகில் துடிப்புள்ள செயல்பாடுகளின் மூலம் தூய்மையான, செழிப்பு மிக்க வாழ்க்கை வாழ்ந்து, அவதாரத்தால் வெளிக் கொணரப்பட்ட உண்மையைக் காணும் முயற்சி நசுக்கப்படுகிறது மனம் வலிமை இழக்கின்றது குருட்டு நம்பிக்கை ஏற்பட்டு மனிதன் செயல்புரியாத நிலைமை அடைவதால் சமூகமும் சீரழிகின்றது. பிளவுபடுகின்றது. நாசம் அடைகின்றது.

இன்றும் இந்த பலவீனம் தென்படுகின்றது. ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ ராமபிரான், பகவான் புத்தர் (அனைவரும் அவதார புருஷர்கள்) இவர்கள் மனிதர்களின் முன் முன்னுதாரணமாக இருந்தார்கள் ஆனால் மனிதர்கள் பலவீனத்தின் வசப்பட்டு, கருத்தின்றி அவர்கள் பெயரை மட்டுமே உச்சரித்து, அவர்களது வாழ்க்கையை, தமது வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டனர்.

சிவாஜி, லோகமான்ய திலகர், மகாத்மா காந்தி போன்றவர்களையும் கூட அவதார புருஷர்கள் என்ற வரிசையில் வைத்து, உயிரற்ற வழிபாட்டிற்கு உரியவர்களாக மாற்றும் அளவு ஜனங்களின் பழக்கங்கள் – குணங்கள் விரிவடைந்தன எல்லா விதமான ஆபத்துகளையும் தாமாகவே எதிர்த்து நின்று, தாண்ட இயலாத மலை போன்ற துன்பங்களையும் தாண்டி வந்து வாழ்க்கையின் நிலையான மதிப்பையும், குறிக்கோள்களையும் நிலை நிறுத்திய, அம்மகான்களின் வாழ்க்கையின் குறிக்கோள்களை நாம் நம் பார்வையில் மறைத்துவிட்டோம்.

இறைவன் ராமபிரானின் மனித வடிவம் நமது சமூகத்தின் பரம்பரையான பலவீனத்தை நன்கு உணர்ந்திருந்த காரணத்தால், வால்மீகி மனித வளர்ச்சியின் உயர்ந்த எல்லை மற்றும் மனிதனுக்குரிய குணங்களின் ஈடு இணையற்ற எடுத்துக்காட்டாக ஸ்ரீ ராமனைச் சித்தரித்தார். மனிதனின் மிகச் சிறந்த குணங்களையுடைய  ஸ்ரீ ராமன் தாய், தந்தையரிடம் பக்தி, சகோதரர்களிடம் பாசம் மனைவியின் பால் அன்பு, அனைவரிடமும் கருணை, தூய்மை ஆகியவற்றால், அனைவருக்கும் தூண்டுகோலாக இருக்கிறார்.

இவற்றையும், மனித வாழ்க்கையில் தினமும் ஏற்படும் பல்வேறு நிகழ்ச்சிகளையும், சிறந்த வழியில் வெளிக் கொணர்ந்து இருக்கிறார். இதனால் மிகச் சாதாரணமான எளிய மனிதனும் கூட, தன் வாழ்க்கையில் புத்துணர்வு பெற்று அந்த ஒளிமிக்க எடுத்துக் காட்டின்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற முடியும். எத்தனை இன்னல்களை அவர் தாண்டி வந்தார்! தாய் – தந்தையரின் பிரிவை சகித்துக் கொண்டார் துணைவியைப் பிரிந்த துயரத்தையும் சகித்துக் கொண்டார்.

பின்னர் பாவகரமான, அதர்மமான சக்திகளை வெற்றி கண்டார். இவற்றையெல்லாம் படிக்கும்போது நம் உள்ளத்தில் ஆசையின் அலை எழுகிறது நம்பிக்கை என்னும் முளை துளிர்க்கிறது. எல்லாத் துன்பங்களையும் எதிர் கொண்டு, வெற்றி பெற்று இவ்வுலகில் நாமும் நம்மைப் படைத்த இறை நிலையை அடைய முடியும்

உயர்ந்த மனிதன்

ஆனால் மனிதனுக்கும், விசேஷமாக மனிதனின் தலைவனுக்கும் வாழ்க்கையில் மறுபக்கம் ஒன்று உள்ளது சமூகத்தின் ஒரு அங்கத்தினனாக இருக்கிற மனிதன், சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. நாடு, காலம் சூழ்நிலை ஆகியவற்றை ஒட்டி இது வெளிப்படுகிறது. இந்தக் கோணத்தில் தலைவன் உபதேசம் செய்பவனாக, மத, சமூக விஷயங்களில் சீர்திருத்தம் செய்பவனாக அரசியலில் கலங்கரை விளக்கமாக, அல்லது இவை அனைத்தும் ஒன்றுபட்ட உருவமாக வெளிப்படுகிறான்.

வால்மீகியினால் சித்தரிக்கப்பட்ட ஸ்ரீ ராமனின் வாழ்க்கையில் இந்த ‘உருவங்கள் அனைத்தும் காட்டப்பட்டுள்ளது. இந்த ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட முன்னுரையில் மனிதர்களின் எடுத்துக்காட்டாக இருந்த இந்த மகானின் குணங்கள் அனைத்தும் விளக்குவது சரியாகாது. எல்லாச் சூழ்நிலையிலும், இன்ப துன்பங்களிலும் நம் சமூகம் இந்த மகானின் வாழ்க்கையிலிருந்து புத்துணர்வு பெற்றது வெற்றி பெறுவதற்கு அவரது வாழ்க்கை வழிகாட்டியாக இருந்தது என்று குறிப்பிடுவதே போதுமானது இன்றைய நாளில் மனிதனின் மேல் அரசியலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு போகிறது.

இந்த முன்னேற்றம் சரியான வழியிலா இல்லையா என்பது இப்பொழுது சிந்தனைக்குரிய கேள்வி அல்ல. ஆனால் இன்றைய நிலை இதுதான். அரசியல் எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த யுகத்திலும், ஆங்கில அரசாட்சியில் இருந்து விடுதலை பெற நடத்தும் போராட்டத்திலும்கூட ராமன் நமக்கு ஊக்கம் அளிக்கின்றார். ‘கால்’ என்ற ஒரு மராட்டி பத்திரிகையின் ஆசிரியர் சிறந்த நாட்டுப் பற்றுடையவர், காலஞ்சென்ற ஸ்ரீ சிவராம் மகாதேவ் பராஞ்சபே ஸ்ரீ ராமபிரானை “கொடுங்கோலர்களை அழித்தவர்” என்று குறிப்பிட்டு, ஜனங்களுக்கு அவரது செயல்களை நினைவூட்டினார் அந்நிய அரசுக்கு எதிராக வெற்றிபெறும் தீச்சுடரை ஏற்றினார்.

மகாத்மா காந்தி அவர்கள் ‘ராம ராஜ்யத்தை நினைவுபடுத்தி, மக்கள் தாம் நலமாக வாழ்வும், ‘பொருளாதாரப் பற்றாக்குறையிலிருந்து விடுதலை பெற முயல வேண்டும்’ என்றும் ஊக்கப்படுத்தினார்.

ராமராஜ்யத்தை மீண்டும் உருவாக்குதல்

மேற்குறித்த பின்னணியில் உருவாகியுள்ள இந்த நூலில் எழுத்தாளர் ஸ்ரீ ராமபிரானை ஒரு சிறந்த அரசியல்வாதியாக, ராம ராஜ்யத்தை தோற்றுவித்தவராக, ஜனங்களின் கண்முன்னர் திறமையாகக் கொண்டு வந்து நிறுத்த முயன்றுள்ளார். ராமராஜ்யம் முழுவதும் அமைதி நிலவி இருந்தது. ஜனங்கள் நேர்மை தவறாது அறநெறியில் நின்று கடமைகளை ஆற்றினர். சுகமும் வளமும் நிறைந்த வாழ்வை நடத்தினர் . அவர் சூழ்நிலையை நன்கு மதிப்பிடும் திறமை பெற்றவராக இருந்தார்.

அரசியலில் கூரியபார்வை, அரசியல் திறமை, தனது அனைத்தையும் சமர்ப்பித்து மக்களுக்குச் சேவை செய்யும் விரதம். தீயவர்களை அழித்தல், கொடியவர்களின் கைப்பிடிகளில் இருந்து பாபம் செய்யாத நல்லவர்களுக்கு விடுதலைதந்து அவர்களைப் பாதுகாத்தல்,தர்மத்தை நிலை நாட்டுதல் ஆகியவை அனைத்தும் ராம் ராஜ்ஜியத்தில் இருந்தன. ‘தர்மத்தை நிலைநாட்டுதல்’ என்ற செயலில், சமூகத்தைச் சிறந்த முறையில் ஏற்றத்தாழ்வுகள் அற்ற முறையில் நிறுவுதல், வேற்றுமைகளில் ஒற்றுமை காணல், ஒருவர்க்கு ஒருவர் விரோதம் காட்டுவதை நீக்குதல் போன்றவை நிறைந்த விசேஷத் தன்மைகளில் வாழ்வில் யதார்த்தமான ஒற்றுமை காணக்கிடைக்கிறது.

இக்கோணங்களிலிருந்து நோக்கியதனால் அந்நாட்களில் இருந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்தது. இன்றும்கூட நமக்கு தற்காலத்திய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், நம் நாட்டில் மீண்டும் ராமராஜ்ஜியத்தை நிறுவுவதற்கும், அவைகளை ஆழமாகப் படித்து, அதிலிருந்து தகுந்த பாடம் கற்று, அதனை ஏற்று, அதனை வழிமுறையில் கொண்டுவர வேண்டும்.

நல்ல குணம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு

மனிதர்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு எந்த குணங்கள் அத்தியாவசியம் என்பதுதான் ஸ்ரீராமருடைய வாழ்க்கையின் சாரம் ராமராஜ்யத்தை மீண்டும் நிறுவ அவைதான் அடிக்கல் முற்றிலும் தூய மனிதனாக வாழும் வாழ்க்கை, சமூகத்தின் இன்ப துன்பத்துடன இரண்டற ஒன்றாகக் கலந்து விடும் தகுதி, அதன் விளைவாக மனக் கட்டுப்பாடுடன் வாழும் வாழ்க்கை, யாரும் வெற்றி கொள்ள முடியாத ராணுவ வீரத்தினால் மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு சக்திகளை அழிக்கும் திறமை, சத்தியத்தின்பால் பற்று, வாக்குத் தவறாமை என்ற உறுதியான தீர்மானம், மக்கள் நலனுக்காக முற்றும் சமர்ப்பணம் செய்தல், அதற்காக எத்தனை தியாகங்கள் செய்ய நேர்ந்தாலும் சரி (உதாரணம் அன்னை சீயை தியாகம் செய்தது) ஆகிய குணங்கள்தாம் அவை. இவை அனைத்திற்கும் மேலாக, முக்கியமானது சமூகத்தின் நெறி, பண்பாட்டில் உறுதியான நம்பிக்கை இவையும் இவை தவிர அனேக உயர்ந்த குணங்கள் இந்த மகான ஸ்ரீ ராமனின் வாழ்க்கையில் வெளிப்பட்டுள்ளன.

அவை அனைத்தையுமே தமக்குள் ஏற்படுத்திக கொள்ள வேண்டியது அவசியம் இன்று நமது சமுதாயத்தைத் துயரம், வறுமையிலிருந்து மீண்டு வரச் செய்து, வளமான வாழ்க்கையின்பால் அழைத்துச் செல்லக் காட்டப் பட்டுள்ளது. வீழ்ச்சியிலிருந்து பெருமையின் சிகரத்திற்கு அழைத்துச் செல்லக் காட்டப்பட்டுள்ளது. இத்தகைய குணங்கள், பண்புகளினறி இருந்தால், ‘ராமராஜ்யம்’ என்பது கருத்தற்ற ஒரு சொல்லாக, நாவில் இருந்துவிடும். ‘ராமராஜ்யம்’ என்ற கற்பனை, கனவாகும் நனவாகாது வழிகாட்டல்

ஸ்ரீ ராமனின் வாழ்க்கையில், கவனிக்கப்படாத மனிதத் தன்மை என்ற மகத்துவம் அடங்கிய இந்தப் பகுதியைப் பற்றி, மேற்கூறிய புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடு முழுவதிலும் ஏமாற்றம், துயரம் ஆகிய மேகங்கள் சூழ்ந்துள்ளன. தலைமைப் பீடத்தில் அமர்ந்திருக்கும் தலைவர்கள், எவ்வாறு இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்களோ, அவ்வாறு இல்லை என்பதை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். ஒளி மிகுந்த, தகுதிவாய்ந்த வழிகாட்டுதல் கிடைத்து, ஏமாற்றம் என்ற இருளிலிருந்து, நம்பிக்கை என்ற ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் ஒளிதோன்ற வேண்டும் என்ற நம்பிக்கை மக்கள் உள்ளத்தில் தீவிரமாகிக் கொண்டு வருகிறது .

இந்தச் சூழலில் ஸ்ரீ ராமபிரானின் வாழ்க்கை குறித்த மேற்கூறிய விளக்கம் நமது வாழ்க்கையில் வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையின் சின்னமாக உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe