ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சங்க முகாம்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி முகாம் நாட்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆர்.எஸ்.எஸ்., சங்க முகாம்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிராதமிக் எனப்படும் ஆரம்ப நிலை முகாம் 7 நாட்களும், முதலாம் ஆண்டு முகாம் 20 நாட்களும், இரண்டாம் ஆண்டு 20 நாட்களும், மூன்றாம் ஆண்டு 25 நாட்களும் இருந்தது.
சங்க முகாம்களின் அமைப்பில் புதிய மாற்றங்கள்:
இப்போது புதிய கட்டமைப்பில், முதன் முதலாக 3 நாட்கள் அறிமுக ஆயத்த வகுப்பு, 7 நாட்கள் பிராதமிக் முகாம் மற்றும் 15 நாட்கள் முதலாம் ஆண்டு முகாம், கார்யகர்த்தர் விகாஸ் வர்க்க -1 20 நாட்கள் மற்றும் கார்யகர்த்தர் விகாஸ் வர்க்க -2 25 நாட்கள் இருக்கும். இந்த வகுப்புகளில் சிறப்பு நடைமுறை பயிற்சியும் இருக்கும்.
2017 முதல் 2023 வரை ஒவ்வொரு ஆண்டும் RSS.org (JOIN RSS) மூலம் புதிதாக சங்கத்தில் இணைவோர் இந்த இணையதளத்தில் RSS இல் சேர வருடம் தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர். ஜனவரி மற்றும் பிப்ரவரி 2024 இல், ராம் லல்லாவின் பிரதிஷ்டைக்குப் பிறகு இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா எனப்படும், தேசிய பொதுக்குழுவின் மூன்று நாள் கூட்டம், மஹாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹொஸபல்லே உட்பட, 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,500 பேர் பங்கேற்றுள்ளனர். 1925ல் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு நிறைவு விழா காண்கிறது. மேலும், தற்போது ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகரான நரேந்திர மோடி பிரதமராக உள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறார். இந்த நேரத்தில், இந்தப் பொதுக்குழு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில் கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் செயல்பாடுகள், சாதனைகள், சந்தித்த சவால்கள் குறித்து பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொஸபல்லே அறிக்கை அளித்தார்.
அப்போது அவர் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். ஆர்.எஸ்.எஸ்.,ஸில் பயிற்சி முகாம்கள் என்பது முக்கியமானது. ஏழு நாட்கள் ஆரம்ப நிலை, 20 நாட்கள் முதலாம் ஆண்டு, 20 நாட்கள் இரண்டாம் ஆண்டு, 30 நாட்கள் மூன்றாம் ஆண்டு என, நான்கு கட்டங்களாக பயிற்சி முகாம்கள் நடக்கும். அதில், மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்தில் மட்டுமே நடக்கும். ஆர்.எஸ்.எஸ்.,ஸில் இருப்பவர்களுக்கு இந்த நான்கு கட்ட பயிற்சி முகாம்களையும் முடிப்பதே லட்சியமாக இருக்கும்.
தற்போது, பயிற்சி முகாம்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக மூன்று நாட்கள் அறிமுக பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். அடுத்த ஏழு நாட்கள் ஆரம்ப நிலை பயிற்சி முகாம் நடத்தப்படும். முதலாம் ஆண்டு பயிற்சி முகாம் 20 நாட்களுக்கு பதிலாக, 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாம், மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம்களுக்குப் பதிலாக பொறுப்பாளர்கள் மேம்பாட்டு முகாம்கள் 20 நாட்கள், 25 நாட்கள் என, இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பேசிய தத்தாத்ரேய ஹொஸபல்லே, ஆர் எஸ் எஸ் என்பது மக்களுக்கான அமைப்பு, அது தனியான அமைப்பல்ல இன்று குறிப்பிட்டு அமைப்பின் நூற்றாண்டு விழாவை மக்களுக்கான விழாவாக கடைபிடிக்க ஏற்பாடுகள் நடப்பதாக தெரிவித்தார்.