சொல்வது ஒன்று செய்வது ஒன்று! இது தானா திமுகவின் நிலைப்பாடு?

உள்ளூர் செய்திகள் சென்னை
dmk - 2026

சென்னையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று முன்தினம் அரசியல் கட்சி ஒன்றின் பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு சென்னை ஐகோர்ட் கடுமையான கண்டனம் தெரிவித்தது

இதன் காரணமாக புதுச்சேரி முதல்வர் பேனர் வைக்க தடை விதித்தார். அதே போல் திமுக தலைவர் முக ஸ்டாலின் இனிமேல் தன்னுடைய கட்சி தொண்டர்கள் யாரும் பேனர்கள் போஸ்டர்கள் வைக்க வேண்டாம் என்றும், அவ்வாறு பேனர்கள் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பேனர்கள் வைக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்

இதனை அடுத்து இன்று பெரம்பூர் ரயில்வே கல்யாண மண்டபம் முன்பு திமுகவினர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று பேனர்கள் வைத்துள்ளனர். நேற்று மு க ஸ்டாலின் அவர்களும், இன்று உதயநிதி ஸ்டாலினும் பேனர் குறித்த அறிக்கை விட்டிருந்தனர்.

நேற்று விடுத்த அறிக்கையின் படி திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பேனர்கள் வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பாரா? நிகழ்ச்சியை புறக்கணிப்பாரா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.