ipl 2024 - 2026

IPL 2024 : ’கில்’ ஆடிய தில் ஆட்டம்! குஜராத் அணி த்ரில் வெற்றி!

இந்தியா சற்றுமுன் சென்னை விளையாட்டு
ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இருபதாம் நாள்
ஐபிஎல் 2024 – 10.04.2024 – ஜெய்ப்பூர்
|ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைடன்ஸ்

ராஜஸ்தான் அணியை (196/3, ரியன் பாராக் 76, சஞ்சு சாம்சன் 68*, ஜெய்ஸ்வால் 24, ரஷீத்கான் 1/18) குஜராத் அணி (199/7, சாய் சுதர்ஷன் 35, ஷுப்மன் கில் 72) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களில் யஸஸ்வீ ஜெய்ஸ்வால் (24 ரன்) இன்று, சற்று, அவர் வழக்கப்படி அடித்து ஆடும் மூடில் இருந்தார். ஆனாலும் 4.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். 

மற்றொரு தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் (8 ரன்) அடுத்த ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் சஞ்சு சாம்சனும் (38 பந்துகளில் ஆடமிழக்காமல் 68 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) ரியன் பாராக்கும் (48 பந்துகளில் 76 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்) அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஐந்து பந்துகள் மட்டுமே ஆடிய ஷிம்ரோன் ஹெட்மயர் 13 ரன் எடுத்தார். இதனால் ராஜாஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கட் இழப்பிற்கு 196 ரன் எடுத்தது.

          197 ரன் என்ற இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (29 பந்துகளில் 35 ரன்) மற்றும் ஷுப்மன் கில் (44 பந்துகளில் 72 ரன்) அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இன்றும் விருத்திமான் சாஹா ஆடவில்லை. மேத்யு வேட் (4 ரன்) மர்றும் அபினவ் மனோகர் (1 ரன்) இருவரும் சரியாக விளையாடவில்லை. இடையில் மழை வேறு குறுக்கிட்டது. அதன்பின்னர் விஜய் ஷங்கர் (16 ரன்), ஷாருக் கான் (14 ரன்), ராகுல் திவாத்தியா (22 ரன்) ரஷீத் கான் (24 ரன்) நன்றாக விளையாடி கடைசிப் பந்தில் குஜராத் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

தமிழக வீரர், அதிரடி ஆட்டக்காரர் எனப் பெயர்பெற்ற ஷாருக் கான் எதிர்பார்த்த அளவிற்கு ஆட்டவில்லை. ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் அஷ்வின், சாஹல், குல்தீப் சென் ஆகியோர் எதிர்பார்த்ததைவிட அதிக ரன் கொடுத்தனர். இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 199 ரன் எடுத்து வெற்றி பெற்றது.  

          குஜராத் அணியின் ரஷீத் கான்  தன்னுடைய சிறப்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை மும்பையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.  

10.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிஆவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்54180.871
கொல்கொத்தா43161.528
லக்னோ43160.775
சென்னை53260.666
ஹைதராபாத்53260.344
குஜராத்6336-0.637
பஞ்சாப்5234-0.196
மும்பை4132-0.704
பெங்களூரு5142-0.843
டெல்லி5142-1.370

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.