வானரங்கள் போட்ட கல் கடலில் மிதந்தது ஏன்?

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம்
ramar bridge - 2026

சுதீட்சணமுனிவரின் ஆஸ்ரமத்தில் ஒரு நாள் பூஜையறையில் பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்டது. முனிவர் சென்று பார்த்த போது அவர் பூஜைக்கு வைத்திருந்த சாளக்கிராமங்களை இரண்டுகுரங்குகள் தலைக்கு ஒன்றாக எடுத்துச் செல்வதைக் கண்டார்.

அவற்றின் பின்னால் ஓடினார். அவை அதை ஏரியில் எறிந்து விட்டு ஓடி விட்டன.
பிறகு முனிவர் அதை தேடி பிடித்து, மீண்டும் ஆஸ்ரமத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.
இப்படி ஒரு முறை அல்ல, பலமுறை நடந்தது. அவருக்குக் கோபம் வந்தது. எனினும் குரங்குகளுக்குச் சாபம் கொடுத்து என்ன பயன்? என்ற எண்ணம்தான் அவருக்குத் தோன்றியது. பிறகு சிறிது யோசித்து விட்டு, இனிநீங்கள் இருவரும்எதைத் தண்ணீரில் எறிந்தாலும் அவைமிதக்கக்கடவது என்று சாபம் கொடுத்தார்.

அன்று முதல், அவரது சாளக்கிராமங்கள் அந்தக் குரங்குகளால் அவ்வப்போது ஏரியில் எறியப்பட்டு மிதப்பதும், அவர்அவற்றை எடுத்து வருவதும் வழக்கமாகிப் போயின.
சுதீட்சண முனிவரால் சபிக்கப்பட்ட அந்தக் குரங்குகள்தான் ராமாயணத்தில் சுக்கிரீவனின் படைத்தளபதிகளாக #வரும் நலன் நிலன் எனும் வானரப்படைவீரர்கள்.

இந்த விஷயம் பிரம்மஞானியான ஆஞ்சநேயருக்குத் தெரியாமலா இருக்கும்? பிற்காலத்தில் இதை ஆஞ்சநேயர் சொல்ல, அதன்படியே சீதையை மீட்க இலங்கைக்குப் போவதற்காகக் கடலில் சேதுபாலம் அமைக்கப்பட்டபோது ராமபிரான், மற்றவர்கள் எடுத்துக்கொடுக்கும் அனைத்துக் கற்களையும் நலனும், நிலனும் மட்டுமே கடலில் வைக்க வேண்டுமென்று கட்டளையிட்டார்.

அதனால் பெரிய பெரிய பாறைகளும் தண்ணீரில் மூழ்காமல் மிதந்து எளிதில் பாலம் கட்டப்பட்டது. இவ்வகையில் சுதீட்சணமுனிவரின் சாபம் ராமகைங்கர்யத்திற்கு நன்மையாகவே முடிந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.