திமுக., மூழ்கும் கப்பல்: ஹெச் ராஜா சாடல்!

சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
hRaja
hRaja

மதுரை: மதுரை பாண்டிகோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் : “பாஜகவில் நவம்பர் மாதத்திற்கு உள்ளாக பூத் அளவில் கட்டமைக்க நடவடிக்கைகள், அதிமுகவின் சீட்டிங் எம்.எல்.ஏ வே திமுகவுக்கு ஆதரவாக இல்லை,

திமுகவினர் திமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்து வருகின்றனர், திமுக கலகலத்துக் கொண்டு உள்ளது, ஆடு ரெண்டு முட்டிக் கொண்டால் நரிகளுக்கு சந்தோஷம், அதிமுக தலைமை பிரச்சினைகளை சுமூகமாக பேசி முடித்து கையாண்டு உள்ளனர்.

முதல்வருக்கு என்னுடைய வாழ்த்துகள், திமுக மூழ்கும் கப்பலாக மாறி வருகிறது, 2021 -ல் திமுக ஆட்சி அமைக்க முடியாது, தமிழக தேர்தல் கூட்டணி குறித்த முடிவை பாஜக தலைமை மட்டுமே அறிவிக்கும்

ஒரு பிரச்சினையில் ஆளும் கட்சி நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தலாம். உ.பி யில் எதிர்க்கட்சிகள் அரசியல் நாடகம் ஆடும் யூக்தி” என கூறினார்.

வருங்காலத்தில் பாஜக., திமுக கூட்டணி கூட ஏற்படலாம் என்ற பொன்.ராதாகிருஷ்ணணின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார் ஹெச்.ராஜா.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.