குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம்!

Published:

courtalanathar-temple-kodiyetram
courtalanathar-temple-kodiyetram

குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசுதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .

தென்காசி மாவட்டம் திருக்குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடக்க நாளில் மகா தீபாராதனை நடைபெற்றது.

திருவிழா வருகிற 17-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் 4-ம் நாளான 11ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 14-ம் தேதி நடராஜருக்கு காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.

15-ம் தேதி காலை 10 மணிக்கு பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 17-ம் தேதி காலை 10 மணிக்கு விசு தீர்த்தவாரி நடைபெறுகிறது. கொரோனா காலம் என்பதால் விழாக்கள் அனைத்தும் கோவிலின் உள்பிரகாரத்திலேயே நடைபெறும்.

வழக்கமாக நடைபெறும் சப்பர வீதி உலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, கோவில் உதவி ஆணையர் மா.கண்ணதாசன், தக்கார் சங்கர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

Related articles

Recent articles

spot_img