ஏழைகளின் நயாகரா என்றழைக்கப்படும் தமிழகத்தின் சொர்க்கப்புரி குற்றாலம் ,கோடைகாலம் முடிந்ததும் ஜீன்,ஜுலை,ஆகஸ்ட் மாதங்கள் குற்றாலம் சீசன் களை கட்டும் ,தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் குற்றாலம் வருவது மிக எளிது இரவு கிளம்பினால் அதிகாலை குற்றாலத்தின் குளிரை அனுபவிக்கலாம் ,

தங்கள் பட்ஜெட்டிலிலும் பெரிய பாதிப்பு இருக்காது என்பதால் பெரும்பான்மையான மக்களின் பட்ஜெட் தேர்வு குற்றாலம் தான் அதில் மாற்றுக்கருத்து கிடையாது ,ஆனால் குற்றாலத்தில் உள்ள மிகப்பெரிய குறை தகவல் மையம் இல்லாதது ,தொலைக்காட்சியில் குற்றால நிலவரம் பார்த்து தொலை துராத்தில் குற்றாலம் கிளம்பி வருவார்கள் ஆனால் காலையில் சில நேரங்களில்தண்ணீர் வரத்து இல்லாமலோ அல்லது அதிக நீர் வரத்தால் சீசனை அனுபவிக்க முடியாமல் போய் விடும் நிலை ஏற்ப்படுகிறது ,அதே நேரத்தில் எந்த அருவி போனால் குளிக்கலாம்,அருகில் உள்ள சுற்றுலா தளங்கள் என எப்படி செல்வது எஎன்கிற எந்த தகவலையும் பெற முடியாத நிலை ஏற்ப்பட்டு விடுகிறது இந்த நிலையை போக்க குற்றாலத்தில் சீசன் காலம் மட்டுமின்றி நிரந்த சுற்றுலா தகவல் மையம் அமைந்தால் வெளியூர் மக்களுக்கு வரப் பிரசாதமாக அமையும் ,கண்டுகொள்ளுமா அரசு




IT IS DESIREABLE TO HAVE A COMMUNICATION CENTRE IN KUTTRALAM WHICH MUST HAVE MULTI PURPOSE UTILITY.;