பொய்யான செய்திகளை தடுக்க பேஸ்புக்கிற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாபுவா நியு கினியா அரசு தெரிவித்துள்ளது
இதுகுறித்து வெளியான செய்தியில், பாபுவா நியு கினியா தகவல் தொடர்பு துறை அமைச்சர் சாம் பைசல், பொய்யான செய்திகளை தடுக்க பேஸ்புக்கிற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போலியான அக்வுண்டுகளை அடையாளம் கண்டு நீக்கவும் முடிவு செய்யபபட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கை மூலம் பேஸ்புக் பயன்படுத்துவர்கள் உண்மையான தகவல்களை பகிர வழிவகை செய்யும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி நியு கினியா அரசு சைபர் கிரைம் சட்டத்தை அமல்படுத்தவும் முயற்சித்து வருகிறது.



