அன்று கருணாநிதி என்ன செய்தாரோ அதையே இன்று எடப்பாடி செய்திருக்கிறார்!

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம்

IMG 20180522 WA0059 - 2026

அன்று கருணாநிதி என்ன செய்தாரோ அதையேதான் இன்று முதல்வராக உள்ள எடப்பாடியும் செய்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம்.

தனது டிவிட்டர் பதிவில், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் பிரச்னை குறித்து குறிப்பிட்டு, அப்போது கருணாநிதி இதையேதான் செய்தார் என்று ஸ்டாலினுக்கு நினைவூட்டியிருக்கிறார்.

அவரது டிவிட்டர் பதிவுகள்:

மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் உரிமையாளர்களை பாதுகாக்க தொழிலாளர்கள் 17 பேரை தாமிரபரணியில் அடித்து படுகொலை செய்த பிண் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தாரோ அதையே தான் பழனிசாமியும் செய்திருக்கிறார்.


* ஜெயா அரசு 2011யில் பரமக்குடியில் 7 பேரை சுட்டு கொலை செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. இதை எல்லாம் மக்கள் கேட்காமல் போனது தான் இப்போ இப்படி சுட்டு கொலை செய்துவிட்டு கமிஷன் அறிவித்துவிட்டு பிரச்சினையை முடித்துவிடுகிறார்கள்.

* இவனுங்க கொடியங்குலம், தாமிரபரணியல் மாஞ்சோலை தொழிலாளர் கொலை, பரமக்குடி துப்பாக்கிச்சூட்டு பற்றி எல்லாம் கேள்வியே பட்ட தில்லை போல.

* தாமிரபரணி ஆற்றில் மாஞ்சோலை தோட்ட தொழில்லாளர்களை எந்த வித வன்முறையில் இல்லாமல் கிருஷ்ணசாமி போராட்டம் என்பதால் சுட்டுபொசுக்கிய திமுக அரசு இன்று உத்தமன்களாக நாடகம் ஆடுகிறார்கள்!

* கூலி உயர்வு கேட்டு நெல்லையில் போராடிய மாஞ்சோலை தேயிலைதோட்ட மக்களை இதேபோலதான் திமுக ஆட்சியில் குருவி சுடுவதைபோல் சுட்டும் தண்ணீரில் அழுத்தியும் கொன்றார்கள்.அன்று திமுக ஆளும் கட்சி,இன்று அதிமுக ஆளும் கட்சி.ஆட்சி மாறலாம் மக்களுக்கான தேவை நிறைவேறுவதில்லை.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.