வாக்கு எண்ணிக்கை முழுதும் வீடியோ பதிவு! முடிவுகள் உடனுக்குடன்… : சத்யப்ரதா சாஹூ

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

election commissioner satyaprada sahu - 2026

நாளை நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கை குறித்து விளக்கினார் தமிழக தேர்தல் ஆணையர் சத்யப்ரதா சாஹூ.

அவர் இது குறித்துக் கூறியபோது, ஒவ்வொரு சுற்றுகளின் முடிவும் வர 30 நிமிடங்கள் ஆகும் மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் என்றார்.

மேலும், 8 மணிக்கே தபால் வாக்குகளுடன் மின்னணு இயந்திர வாக்குகளையும் எண்ணும் பணி தொடங்கும்; மின்னணு இயந்திரங்களில் எண்ணப்பட்டபின்னரே ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

36 ஆயிரம் காவலர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு வழங்குவர்; 1,520 துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்று கூறினார் சத்யபிரதா சாஹூ

அதிக பட்சமாக திருவள்ளூர் தொகுதியில் 34 சுற்றுகள் எண்ணப்படும்; குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகள் எண்ணப்படும்! 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட இருக்கின்றனர் என்றார் அவர்.

VOTER HELPLINE மொபைல் ஆப் மூலமும் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார் சத்யபிரதா சாஹூ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.