கொரோணா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 19.3.2020 முதல் 31.3.2020 வரை செங்கோட்டை – கொல்லம் – செங்கோட்டை (56735/56738) கொல்லம் – புனலூர் – கொல்லம் (56740/56739 & 56744/56743) காரைக்குடி – விருதுநகர் – காரைக்குடி (76837/76838) காரைக்குடி – திருச்சி – காரைக்குடி (76839/76840) திருச்சி – மானாமதுரை – திருச்சி (76807/76808) ஆகிய பயணிகள் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
குருவாயூர் – புனலூர் – குருவாயூர் (56365/56366) பயணிகள் ரயில் கொல்லம் – புனலூர் ரயில் நிலைகளுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மார்ச் 26 அன்று இயக்கப்பட இருந்த ஜபல்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (01704) மற்றும் மார்ச் 28 அன்று இயக்கப்பட இருந்த திருநெல்வேலி – ஜபல்பூர் சிறப்பு ரயில் (01703) ஆகியவையும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
இந்தத் தகவலை தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.