மகள்களை இலண்டனிலிருந்து அழைத்துக் கொண்ட ஆந்திரா முதல்வர் ஜெகன். முதல்வர் ஜகன் மீது தெலுங்குதேசம் கட்சி ஆத்திரம்.
கரோனா வைரஸ் பரவுவது பற்றி முதலமைச்சர் ஜெகன் செய்த அறிவிப்பு பற்றி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் புத்தா வெங்கன்னா விமர்சித்தார்.
கரோனா வைரஸ் பரவுவதை பற்றி ஆந்திரா முதல்வர் ஜெகன் செய்த கருத்து பற்றி தெலுங்குதேசம் கட்சித் தலைவர் விமர்சனம் செய்தார். பாராசிட்டமால் போட்டுக்கொண்டால் கரோனா நோய் விலகிப் போய்விடும் என்றும் பிளீச்சிங் பவுடர் தெளித்தால் நோய் கிருமிகள் இறந்து போய்விடும் என்றும் ஒய்எஸ் ஜெகன் கூறியுள்ளார். உண்மையில் கரோனா என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல என்பதாகக் கூறிய ஜகன் தன் இரு மகள்களை மட்டும் இலண்டனிலிருந்து எதற்காக திருப்பி அழைத்துக் கொண்டார்? என்று வினா எழுப்பினார்.
இதனை கொண்டு மக்களின் உயிர்களைப் பற்றி பெரிய கவலைப்படாமல் தானும் தன் குடும்பமும் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார் போல் உள்ளது என்று விமர்சனம் செய்தார்.
மாநிலத்தில் உள்ள குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஜெகன் குடும்பம் மட்டும் தாடேபல்லி கோட்டையில் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார் போல் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.