உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிலும், கூட்டம் சேர்ப்பது, மக்கள் கூடுவது இவற்றைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன மத்திய மாநில அரசுகள்.
இருப்பினும், வணிக ரீதியான நிறுவனங்களில் அரசின் கட்டளைகள் எடுத்துக் கொள்ளப்பட, அதே போல், மத நிறுவனங்களையும் அரசு கட்டுப்படுத்துவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்து மத நிறுவனங்கள், ஆலயங்கள், நிகழ்ச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தும் மாவட்ட நிர்வாகங்கள், முச்லிம், கிறிச்துவ மார்க்கங்கள் என்றால், கெஞ்சிக் கூத்தாடி வெறுமனே வேண்டுகோள் விடுத்து, அறிவுறுத்தல்களை மட்டுமே கொடுப்பது வாடிக்கையாகி விட்டது.
இது போன்ற நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு, பலரும் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள்.
மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்ள அறிவுரை
அதே போல் கிறித்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுகிழமை நடைபெறும் திருப்பலி நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்ள அறிவுரை
ஆனால் இந்துக்கள் கோவில் விழாக்கள் கிராம பொங்கல்கள் உட்பட எந்த நிகழ்ச்சியும் நடத்த தடை #விருதுநகர்_கலெக்டர்
ஏன் இந்துக்களுக்கு மட்டும் அறிவுரை கொழுந்தை சொல்ல மாட்டீர்களோ அதென்ன தடை? கொடுமையடா சாமி
புகழ் பெற்ற எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வரும் திங்கட்கிழமை 23ம் தேதி நடைபெற உள்ளது
இதற்கு கொடியேற்றம் நடந்து இன்று 7 ம் திருவிழா
ஆயிரக்கணக்கான மக்கள் விரதம் இருந்து தீ மிதிப்பார்கள் ஊரே விழாக்கோலமாக இருக்கும்
தற்போது கொராணா காரணமாக மாவட்ட கலெக்டர் பூக்குழி விழாவிற்கு தடை விதித்துள்ளார்..
கொடியேறிய பின்பு ஒரு கோவில் விழாவை தடை செய்வது அபசகுணமாகும் இது போன்ற தவறை தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும்..
புகழ்பெற்ற எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூ(தீ)க்குழி திருவிழா வரும் திங்கட்கிழமை 23ம் தேதி நடைபெற உள்ளது
இதற்கு கொடியேற்றம் நடந்து இன்று 7 ம் திருவிழா
ஆயிரக்கணக்கான மக்கள் விரதம் இருந்து தீ மிதிப்பார்கள் ஊரே விழாக்கோலமாக இருக்கும்
தற்போது கொராணா காரணமாக மாவட்ட கலெக்டர் பூ(தீ)க்குழி விழாவிற்கு தடை விதித்துள்ளார்
கொடியேறிய பின்பு ஒரு கோவில் விழாவை தடை செய்வது அபசகுணமாகும் இது போன்ற தவறை தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும்
– ராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர்
குற்றாலம் சென்று வரும்போது குரங்குகளையும் பார்த்துக்கொண்டே வந்தேன்! வரும் வழியில் மௌனசாமி மடத்தில் இந்தத் தகவலை எழுதி வைத்திருக்கிறார்கள். அரசு நடவடிக்கை காரணமாக பிரத்யங்கிரா தேவியின் அமாவாசை ஹோமம் மறு தேதி இன்றி மாற்றியமைக்கப் படுவதாக தகவல் பதிவு செய்திருக்கிறார்கள்! ஒருவேளை கோவில் நிர்வாகத்துக்கு, அதுவும் தனியார் கோவில் நிர்வாகத்துக்கு தான் இப்படி நடவடிக்கை எடுக்கும்படி அரசு கட்டளையிடுகிறது போலும்!