October 5, 2024, 9:04 PM
29.4 C
Chennai

ஹிந்து என்பது மதமல்ல… வாழ்வியல் முறை! எப்படி தெரியுமா?!

எதை எதை எல்லாம் அவர்கள் (அந்நிய கலாச்சாரத்தை ✝☪ கடைபிடிப்பவர்கள்) மூடநம்பிக்கை என்று சொன்னார்களோ அதைத்தான் இன்று உலகம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. அதுதான் இந்து தர்மம்.

இந்து சமயம் ஓர் மதமல்ல. மனித வாழ்வியல் நெறி. இந்து சமயத்தின் வழிபாட்டு முறைகளை மூட நம்பிக்கை எனக் கூறுகிறார்கள் பகுத்தறிவு வாதிகள்.

எதை எதை எல்லாம் அவர்கள் மூடநம்பிக்கை என்று சொன்னார்களோ அதைத்தான் இன்று உலகம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. அதுதான் இந்து தர்மம்.

அதிரடியாக தொடர்ந்து ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியில் பலியெடுக்கின்றது கொரோனா.

கொரோனாவினால் அதிக உயிர்கள் பலியானது சீனாவில். இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் ஈரானும், நான்காம் இடத்தில் தென் கொரியா வும் உள்ளன.

இத்தாலியைத் தொடர்ந்து பிரிட்டன்,ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய நாடுகளில் கொரோனா பரவிக் கொண்டிருக்கின்றது.

கிறிஸ்தவ வழிபாடு யூத வழிபாட்டின் தொடர்ச்சி. அதாவது கூட்டு வழிபாடு,மொத்தமாக கூடித்தான் பிரார்த்திப்பார்ககள், கொஞ்சம் அதிகமாக நேரம் எடுக்கும் விஷயம் என்பதால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது என முடிவெடுத்து தேவாலயங்களை மூடி விட்டார்கள்.

இந்நிலையில் #இந்துக்களின் ஆலய பிரவேசத்தையும் வழிபாட்டு முறைகளையும் கவனியுங்கள்.#ஆச்சரியமான பல விஷயங்கள் புலப்படும்.

இந்துக்களில் கூட்டு வழிபாடு பெரும்பாலும் இல்லை. மாறாக யாரும் எப்பொழுதும் வரலாம். வழிபடலாம்.

இந்து ஆலயங்களில் வழிபாட்டுக்கு முன்பு சம்பிரதாயபடி கால் கையினை கழுவிவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும், இதனால் நோய் பரவும் முதல் வழி தடுக்கப் படுகின்றது.

ஆலயத்தில் சுவாமிக்குக் காட்டும் தீபத்தில் கையினை வைக்கும் பொழுதும், அக்கையினை கண்ணில் வைக்கும் பொழுதும் கிருமிகள் இருந்தால் அழிந்து விடும், கற்பூரம் ஏற்றி கண்ணில் ஒத்துவதன் உண்மைத் தத்துவம் இதுதான்.

கையினால் முகத்தை தொடாதீர்கள், கண்ணை மூக்கை தொடாதீர்கள். அடிக்கடி கழுவுங்கள் என இப்போது உலகம் ஒப்பாரி வைக்கும் வேளையில்….

தீபச் சுடரில் கைகளை காட்டி சூடேற்று. அதை முகத்துக்கும் கொடு நோய் பரவாது என என்றோ சொன்ன மதம் இந்துமதம்.

கர்ப்பக் கிரகத்தின் முன் வழிபாடு முடிந்ததும், கொடுக்கும் விபூதியினை நெற்றியில் பூசினால் நோய்க் கிருமிகள் முகத்தில் அண்டாது. அது கிருமி நாசினி , பசு சாண சாம்பல் இருக்குமிடம் கிருமிகள் வராது.

சாம்பிராணி புகையில் காற்றில் பரவும் கிருமிகள் அழிந்து விடுகின்றன. ஆலயமெங்கும் புகை பரப்பும் அதுதான்.

ஆலயமெங்கும் தீபம் ஏற்றப்படும் தத்துவமும் இதுவே, அதுவும் நெய்யிலும் இன்னும் சில எண்ணெயிலும் எரியும் நெருப்பு கொடுக்கும் சக்தி விஷேஷமானது.

இவை அனைத்தும் வீட்டில் விளக்கேற்றி, சாம்பிராணி போட்டு, கற்பூர தீபம் காட்டி சுவாமியை வழிபடும் போது, வீடும் நோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கப் படுகிறது.

ஆலயங்களில் தரப்படும் சில பொருட்கள் கலந்த தீர்த்தம் மருத்துவ குணம் வாய்ந்தது, சர்வ கிருமி நாசினி, குடித்தால் தொற்று நோய் எளிதில் அண்டாது, அதை கைகளில் தேய்த்து கொண்டால் நோய் தடுக்கப்படும்.

கோயில்களில் பிரச்சாதம் என தரும் தேங்காய் முதல் மிளகு கலந்த பொங்கல் வரை எல்லாமும் மருந்தே.

அது வைஷ்ணவ ஆலயமாக இருந்தால் துளசியும், அம்மன் கோவிலாக இருந்தால் கொடுக்கபடும் வேப்பிலையும் சிறந்த நோய் தடுப்பு மருந்துகள்.

ஆலய மணி ஒலிக்க ஒலிக்க வழிபாடு நடத்துவது ஏன்? ஆலயமணியின் சில அதிர்வுகள் நுண்ணிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள், மெல்லிய எலக்ட்ரிக் ஷாக் சிகிச்சைக்குரிய அதிர்வினை அது கொடுக்கும், ரத்த ஓட்டம் சீர்படும். இசை ஒலிக்கப்படும் தத்துவமும் இதுவே

கோவில் எல்லோரும் வரும் இடம். விக்கிரகங்களையும் ஐயரையும் எப்பொழுதும் மிகவும் சுத்தமாக இருக்கச் சொன்னார்கள். அர்ச்சகர் தள்ளி நிற்பதும் அதிகம் தொட்டுப் பேசாததன் காரணமும் இதுதான்.

மாமிச உணவு உடல் வெப்பத்தை கூட்டும். ஆலயங்களில் கூடுதல் வெப்பம் நிலவும் என்பதாலும் அசைவ உணவினை உண்டவர்க்கு ஆலயத்தில் அனுமதி இல்லை என்றார்கள்.

அடிக்கடி காலையும் மாலையும் சில விக்ரகங்களை அபிஷேகம் என‌ கழுவுகின்றார்களே அதுவும் மருத்துவம் தான்.

அக்காலத்தில் விக்கிரகத்தை தொட்டு வணங்கும் வழக்கம் இருந்தது, பலர் தொட்டு செல்லும் நிலையில் நோய் பரவிவிட கூடாது என்பதற்காக அடிக்கடி நீரும் இன்னும் சில வஸ்துகளும் இட்டு கழுவி சாம்பிராணியிட்டு சுத்தமாக்கி வைத்தார்கள். கற்பூர தீ கூட கிருமி அழிக்கும் தன்மை கொண்டதே,

நறுமண பூக்களால் அலங்கரித்தார்கள், நல்ல மணம் கூட சில நல்ல விஷயங்களை கொண்டுவரும்.

திதி கொடுத்தல் இன்னும் சில விஷயங்களில் அர்ச்சகர் எமது கையில் தர்ப்பை கட்டுகின்றாரே ஏன்? தர்ப்பையில் நோய் கிருமி பரவாது என்பதை அன்றே அறிந்திருந்தது இந்து சமூகம்.

இந்துக்கள் எதெல்லாம் செய்ய சொன்னார்களோ அதெல்லாம் நோய் தடுப்பென்றும், எதெல்லாம் தீட்டு என்றார்களோ அதெல்லாம் நோய் பரப்பும் விஷயம் என்பதை இப்போது மௌனமாக ஒப்புகொள்கின்றது உலகம்.

தொற்றுநோய் என புத்த விகாரை முதல் மேற்கத்திய தேவாலயம் வரை மூடப்பட்ட நிலையில், இந்து ஆலயங்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒழிந்திருக்கும் நோய் தடுப்பு முறை யினையும் அக்காலத்திலே மிக நுட்பமாக செய்யபட்டிருக்கும் ஏற்பாடுகளையும் பற்றி வியந்து கொண்டிருக்கின்றது உலகம்.

இங்கு எதுவும் மூட நம்பிக்கை அல்ல, புரிந்து கொள்ள முடியாத மூடர்களின் கூட்டமே அப்படி சொல்லுமே அன்றி, அறிவுள்ள உலகம் நெருக்கடியான இந்நேரத்தில் இந்து ஆலயங்களின் பெருமையினை உணர்ந்து செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஆம், இந்து சமயம்???? ஓர் மதமல்ல மனித வாழ்வியல் நெறி.

author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு!

விழா ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் நாயுடு சமுதாய நிர்வாகிகள், பெரியோர்கள், இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனா்.

பஞ்சாங்கம் அக்.05 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.05ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்||श्री:||...

டிவி ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் ‘டேமேஜ்’தான்!

நம்மில் பலரும், வீட்டில் உள்ள மற்ற பொருட்களை போலவே ஸ்மார்ட் டிவியையும் சுத்தம் செய்யும் பழக்கத்தினை கொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா?

வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு!

நவம்பர் 2024க்கான மழை மற்றும் வெப்பநிலைக்கான கண்ணோட்டத்தை அக்டோபர் 2024 இறுதியில் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறைவெளியிடும். வடகிழக்குப்

பஞ்சாங்கம் அக்.04 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு!

விழா ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் நாயுடு சமுதாய நிர்வாகிகள், பெரியோர்கள், இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனா்.

பஞ்சாங்கம் அக்.05 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.05ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்||श्री:||...

டிவி ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் ‘டேமேஜ்’தான்!

நம்மில் பலரும், வீட்டில் உள்ள மற்ற பொருட்களை போலவே ஸ்மார்ட் டிவியையும் சுத்தம் செய்யும் பழக்கத்தினை கொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா?

வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு!

நவம்பர் 2024க்கான மழை மற்றும் வெப்பநிலைக்கான கண்ணோட்டத்தை அக்டோபர் 2024 இறுதியில் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறைவெளியிடும். வடகிழக்குப்

பஞ்சாங்கம் அக்.04 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம்- கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கம்! முன்பதிவு தொடக்கம்!

இந்த ரயிலை நிரந்தரமாக சாதாரண முன்பதிவு பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத சாதாரண ரயில் பெட்டிகள் இணைத்து இயக்க தமிழக கேரள ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

ஸ்ரீவி., வடபத்ரசாயி பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலின் பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மாணவர்களுக்கான ‘திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி’; மதுரை ஆட்சியர் அழைப்பு!

1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும்.

Related Articles

Popular Categories