இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்தில் விக்கெட்டை எடுத்து சாதனை படைத்தார் அஸ்வின்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்களை அடித்தது. அந்த அணியில் கேப்டன் ஜோ ரூட் அதிகபட்சமாக 218 ரன்களை அடித்தார்.
இதையடுத்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 377 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 242 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் புஜாரா 73 ரன்களும், ரிஷப் பந்த் 91 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது
அஸ்வின் வீசிய பந்தில் ராரி பர்ன்ஸ் டக் அவுட்டானார்.
இதன் மூலம் கடந்த 100 ஆண்டுகளில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்தில் விக்கெட்டை எடுத்த முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
அஸ்வினுக்கு முன்னதாக 1907 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பெர்ட் வாக்லர் இதை செய்திருந்தார். அதற்கு முன்பு 1888 ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பாபி பீல் இந்த சாதனையை செய்திருந்தார்.
R Ashwin is the first spinner in over 100 years to take a wicket off the first ball of an innings!
— ESPNcricinfo stats (@ESPNcric_stats) February 8, 2021
Bobby Peel, 1888
Bert Vogler, 1907
R Ashwin, 2021#INDvENG