மூங்கில் அரிசி ஹல்வா
தேவையான பொருட்கள்
1/2 கப் மூங்கிலரிசி •
1/4கப் நாட்டு சர்க்கரை அல்லது
வெல்லம்
1/4* கப் தேங்காய் துருவல்
•ஏலக்காய் தூள்
5 முந்திரி பருப்பு
5 உலர் திராட்சை
பசுநெய்
செய்முறை
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
•நாட்டுசர்க்கரையாக இருந்தால் அப்படியே எடுத்துக்கொள்ளலாம், வெல்லமாக இருந்தால் முதலில் அதனை தூளாக்கிக்கொள்ளவும்.
மூங்கிலரிசியை சுத்தம் செய்து ஒருமணிநேரம் ஊறவைக்கவும்.
பின் அதனை நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, சிறிதளவு நீர் ஊற்றி வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரையை அடுப்பில் வைத்து, பாகு தயார்செய்யவும்.
வெல்ல பாகுடன் அரைத்த மூங்கிலரிச் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும்.
நன்கு கொதிவந்ததும் சிறிது சிறிதாக
பசுநெய்யினை சேர்த்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதனுடன் முந்திரி பருப்பு, உலர்
திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து
கிளற வேண்டும்.
கைவிடாமல் கிண்டிக்கொண்டே இருக்க நன்கு வெந்து நல்ல மணத்துடன் நிறம் மாறி திரண்டு ஹல்வா பதத்திற்கு கெட்டியாக வந்துவிடும்.
சுவையான மூங்கிலரிசி ஹல்வா தயார் எல்லா வயதினருக்கும் ஏற்றது.